இந்தியா

அரசியலமைப்பு உறுதியை பாஜக அழித்துள்ள சூழலில் ராகுல் காந்தி இதனை செய்துள்ளார்: மெகபூபா முப்தி

DIN

ஜம்மு-காஷ்மீருக்கு அரசியலமைப்பினால் கொடுக்கப்பட்ட உறுதிகளை பாஜக அழித்துவிட்ட  சூழலில் ராகுல் காந்தி இங்கு மூவர்ணக் கொடியை ஏற்றியுள்ளதாக மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி தெரிவித்தார்.

ஜம்மு-காஷ்மீர் ராணுவத்தின் முழுக் கட்டுப்பாட்டின் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரில் லால் சௌக் பகுதியில் ராகுல் காந்தி மூவர்ணக் கொடியை ஏற்றியதைத் தொடர்ந்து இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவுகளையும் அவர் வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவுகளில் அவர் கூறியிருப்பதாவது: 1948-ஆம் ஆண்டு கடலளவுக்கு திரண்டிருந்த மக்கள் கூட்டத்தின் நடுவே அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு முதல்முறையாக ஜம்மு-காஷ்மீரில் தேசியக் கொடியினை ஏற்றினார். அந்தத் தருணம் மறக்க முடியாத கொண்டாட்டங்கள் நிறைந்ததாக ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு அமைந்தது. ஜம்மு-காஷ்மீர் மக்கள் தங்கள் மீது படையெடுத்து தாக்கியவர்களை வெற்றிகரமாக சண்டையிட்டு பின்வாங்கச் செய்தனர். இதனால், இந்தியாவுடன் ஜம்மு-காஷ்மீருக்கு பரஸ்பர புரிதலுடன் கூடிய உறவு தொடங்கியது.

முஸ்லிம்கள் அதிகம் உள்ள ஜம்மு-காஷ்மீரை நேரு அவர்கள் உறுதி அளித்து இந்தியாவுடன் ஜம்மு-காஷ்மீரை இணைத்தார். மதம் மட்டுமின்றி ஜம்மு-காஷ்மீர் மக்களின் கலாசாரம், பண்பாடுகள் ஆகியவை இந்தியாவுக்குள் பரஸ்பர ரீதியாக இணைந்த காஷ்மீருக்கு பாதுகாக்கப்பட்டது. இதனை உறுதி செய்யும் விதமாக இந்திய அரசியலமைப்பில் சட்டவிதி 370 கொண்டுவரப்பட்டு ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது.

ஆனால், ஜம்மு-காஷ்மீரின் பிரச்னைகளை தீர்ப்பதாகக் கூறி அரசியலமைப்புக்கு புறம்பான முறையில் பாஜக ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கியது. அவர்கள் ஜம்மு-காஷ்மீரின் பிரச்னைகளுக்கு தீர்வு காண தவறியதோடு இந்தியாவின் 2000 சதுர கிலோ மீட்டர் பகுதியை சீனாவுக்கு பரிசாக கொடுத்துள்ளனர் எனப் பதிவிட்டுள்ளார்.

ராகுல் காந்தி தலைமையிலான ஒற்றுமை நடைப்பயணம் ஜம்மு-காஷ்மீரின் லால் சௌக் பதியை அடைந்தது. அங்குள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மணிக்கூண்டு மண்டபத்தில் ராகுல் காந்தி தேசியக் கொடியை ஏற்றினார். இந்த நிகழ்வின்போது ராகுல் காந்தியின் சகோதரியான பிரியங்கா காந்தி அவருடன் இருந்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒசூரில் பீன்ஸ் கிலோ ரூ.150-க்கு விற்பனை

சித்திரை மாதப் பெளா்ணமி: பக்தா்கள் கிரிவலம்

ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை வேளாண் மாணவிகளின் முகாம்

சாலை விபத்தில் காயமடைந்த முதியவா் உயிரிழப்பு

முஸ்லிம்கள் குறித்த பிரதமரின் பேச்சு தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT