இந்தியா

மோடியை தவிர வேறு எந்த பிரதமரும் என்னை அமைச்சராக்கியிருக்க மாட்டார்கள்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

DIN

புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடியைத் தவிர வேறு எந்தப் பிரதமரும் தன்னை அமைச்சராக நியமித்திருப்பார்களா என்பது உறுதியாகத் தெரியவில்லை என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சனிக்கிழமை தெரிவித்தார்.

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரான ஜெய்சங்கர், வெளியுறவுத் துறையில் இந்தியாவுக்கு உள்ள சவால்களை கூர்ந்துநோக்கி, ஆராய்ந்து "The India Way: Strategies for an Uncertain World" எனும் நூலை எழுதியுள்ளார். இது தமிழில் "இந்திய வழி: நிச்சயமற்ற உலகத்திற்கான உத்திகள்" என மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது. 

இந்நிலையில், அந்த நூல் மராத்தியில் ‘பாரத் மார்க்’ என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அந்த நூலின் வெளியீட்டு விழா புணேவில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்று பேசிய மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், "வெளியுறவுச் செயலாளராக வருவதே எனது லட்சியத்தின் எல்லையாக இருந்தது, அமைச்சராக வேண்டும் என்று நான் கனவில் கூட நினைத்ததில்லை." 

நரேந்திர மோடியைத் தவிர வேறு எந்தப் பிரதமரும் என்னை அமைச்சராக்கியிருப்பார்களா என்று எனக்குத் தெரியவில்லை.

மேலும், “அவர் பிரதமராக இல்லாவிடில் அரசியலுக்கு வர எனக்கு தைரியம் இருந்திருக்குமா என்று எனக்குத் தெரியாது” அதுகுறித்து சில சமயங்களில் என்னை நானே கேட்டுக் கொண்டதுண்டு. 

முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுடன் வெளியுறவு செயலராக பணியாற்றிய அனுபவம் குறித்தும் பேசினார்.

“வெளியுறவுத்துறையின் மிகவும் நல்ல அமைச்சர் சுஷ்மா ஜி இருந்தார், எங்கள் கூட்டணி மிகவும் நன்றாக இருந்தது, அமைச்சர்-செயலாளர் கலவை என்று நான் கூறுவேன். ஆனால், நான் ஒன்றை கற்றுக்கொண்டதுண்டு, அதாவது பொறுப்புகளில் வேறுபாடு உள்ளது, செயலாளர் மற்றும் அமைச்சர் என்ற ஒட்டுமொத்த உணர்விலும் வித்தியாசம் உள்ளது.

மேலும்,"செயலாளர் இன்னும் அவர்களுக்கு மேலே ஒரு அமைச்சர் இருக்கிறார், அவர் நாடாளுமன்றத்திற்கு பதிலளிக்கக்கூடியவர், பொதுமக்களுக்கு பதிலளிக்கக்கூடியவர், இது உங்களுக்குத் தெரியும்." இது ஒரு அமைச்சராக அவரது நடத்தையை வடிவமைத்துள்ளது, இது அமைப்பின் மீது நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்று ஜெய்சங்கர் கூறினார்.

ஜெய்சங்கர் மேலும் பேசுகையில், “சீனா ஒரு அசாதாரண அண்டை நாடு. நமக்கு பல அண்டை நாடுகள் உள்ளன. ஆனால், சீனா உலக வல்லரசாகவோ அல்லது வல்லரசாகவோ மாறலாம். உலக சக்திக்கு அடுத்தபடியாக வாழ்வதற்கு சொந்த சவால்கள் உள்ளன” என்று ஜெய்சங்கர் கூறினார்.

இந்த புத்தகத்தில் சீனாவை நிர்வகிக்க அரசியல், பொருளாதார மற்றும் தொழில்நுட்ப வழிகள் உள்ளன என்று ஜெய்சங்கர் கூறினார். தேசிய பாதுகாப்பு குறித்தும் பேசிய ஜெய்சங்கர், மற்ற நாடுகளை விட பயங்கரவாதத்தால் இந்தியா எப்படி பாதிக்கப்பட்டுள்ளது என்பதை குறித்து பேசினார்.

“சில சமயங்களில் தேசிய பாதுகாப்புக்கு தீர்க்கமான நடவடிக்கைகள் தேவைப்படும் சவால்கள் உள்ளன. அதற்கு ஒரு தெளிவான உதாரணம் பயங்கரவாதம், மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது பயங்கரவாதத்தால் இந்தியா எவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம், ஏனென்றால் மற்ற நாடுகளுக்கு நமக்கு இருக்கும் அண்டை நாடு போன்று இல்லை, ”என்று பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்தார் ஜெய்சங்கர்.

ஜெய்சங்கர் வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் வெளியுறவுச் செயலாளராக பணியாற்றியவர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

SCROLL FOR NEXT