இந்தியா

நிதீஷ் குமாருடன் எதிர்காலத்தில் கூட்டணி இல்லை: பாஜக

DIN

நிதீஷ் குமாருடன் எதிர்காலத்தில் கூட்டணி இல்லை என்று பாஜக தலைவர் சுஷில் மோடி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து தர்பங்காவில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், எதிர்காலத்தில் நிதீஷ் குமார் அல்லது ஜேடியுவுடன் கூட்டணி இருக்காது என்பதை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் அனைத்து மூத்த தலைவர்களும் மிகத் தெளிவாகக் கூறியுள்ளனர்.

அவர் பாஜகவுக்கு மட்டும் துரோகம் இழைக்கவில்லை, மக்கள் மற்றும் பிரதமர் மோடி வைத்த நம்பிக்கைக்கும் துரோகம் இழைத்துள்ளார். 

நிதீஷ் குமார் தற்போது பிரச்னைக்குரியவராக மாறிவிட்டார். அவரது வாக்குகளை மாற்றும் திறன் முடிந்துவிட்டது. கடந்த பேரவைத் தேர்தலில் பிரதமர் மோடி பிரசாரம் செய்ததால்தான் 44 இடங்களை அவரால் வெல்ல முடிந்தது. இல்லையெனில் அவர் 15 இடங்களில் கூட வெற்றி பெற்றிருக்க மாட்டார். நிதீஷ் குமார் இப்போது பலமற்றவர்.

பாஜகவில் இருந்தாலும் சரி, ஆர்ஜேடியில் இருந்தாலும் சரி, அவரால் இனி வாக்குகளை பெற முடியாது. அவர் கூட்டணியில் இருந்து விலகியதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இனி 2025-ல் நடக்கவிருக்கும் பேரவைத் தேர்தலில் தனித்து போட்டியிட்டு ஆட்சிக்கு வரலாம். இவ்வாறு அவர் குறிப்பிட்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊருணியில் மூழ்கி மாணவா் பலி

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

கொட்டாரம் அருகே தொழிலாளி தற்கொலை

விளாத்திகுளத்தில் அரசுப் பேருந்துகள் இயக்கம் குறைப்பு -பயணிகள் தவிப்பு

சங்கரன்கோவிலில் அதிமுக சாா்பில் நீா், மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT