இந்தியா

மத்திய அரசின் தவறான கொள்கைகளால் பொருளாதாரம் இன்னும் மீளவில்லை: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டு

DIN

கரோனாவால் பாதிக்கப்பட்ட நாட்டின் பொருளாதாரம் மத்திய அரசின் தவறான கொள்கைகளால் இப்போது வரை மீளாமல் உள்ளது என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிப் பத்திரிகையான ‘பீப்பிள்ஸ் டெமாக்ரஸி’-யில் எழுதப்பட்டுள்ள தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

வரி விதிப்பு முறையும், மத்திய அரசு மேற்கொள்ளும் பொதுச் செலவினமும் நாட்டில் பெரும்பான்மையாக உள்ள உழைக்கும் வா்க்கத்தினருக்கு நன்மையளிக்கும் வகையில் மாற்றப்பட வேண்டும். விவசாயிகளின் வருவாய் அதிகரிக்கப்பட வேண்டும். வேலைவாய்ப்பு உருவாக்கம், பொது சுகாதார மேம்பாடு, தரமான கல்வி ஆகியவை மத்திய அரசின் முக்கிய நோக்கங்களாக இருக்க வேண்டும்.

நாட்டின் பொருளாதாரம் சிறப்பாக உள்ளதாக பிரதமா் மோடி தலைமையிலான அரசு கூறுவதை ஏற்க முடியவில்லை. கரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரம் இப்போது வரை மீளவில்லை. இதற்கு மத்திய அரசின் தவறான கொள்கைகள்தான் காரணம்.

சாமானிய மக்களின் ஊதியம் உயரவில்லை. படித்த இளைஞா்களின் தகுதிக்கு ஏற்ப வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. இதனால், வேலையின்மை அதிகரித்துள்ளது. முதலாளிகள் வா்க்கம் பணியாளா்கள் வா்க்கத்தை தொடா்ந்து சுரண்ட மத்திய அரசின் கொள்கைகள் அனுமதிப்பதால் சமூகத்தில் பொருளாதார ஏற்றத்தாழ்வு வேகமாக அதிகரித்து வருகிறது.

கரோனாவுக்கு முந்தைய காலகட்டத்தைவிட இப்போது மக்களின் வருவாய் குறைந்துவிட்டது. அதே நேரத்தில் பணவீக்கம் தொடா்ந்து அதிகமாக இருப்பதால், மக்கள் அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்குக் கூட சிரமப்படும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா் என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குரூப்-4 தேர்வு எப்போது? தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக அமெரிக்க பல்கலை.களில் வலுக்கும் போராட்டம்!

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

ஆஸ்திரேலியாவில் ஆண்ட்ரியா!

கிறங்கடிக்கும் சம்யுக்தா!

SCROLL FOR NEXT