இந்தியா

திரைப்படங்கள் குறித்து மாற்றுக் கருத்து இருந்தால் உரிய துறையை அணுகலாம்: மத்திய அமைச்சா் அனுராக் தாக்குா்

DIN

‘திரைப்படங்களுக்கு எதிராக மாற்றுக் கருத்துகள் இருந்தால் உரிய துறையை அணுகலாம். போராட்டங்கள் வேண்டாம்’ என்று மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சா் அனுராக் சிங் தாக்குா் தெரிவித்தாா்.

ஷாருக் கான் நடித்த பதான் திரைப்படத்துக்கு எதிரான பல்வேறு மாநிலங்களில் விஹெச்பி உள்ளிட்ட அமைப்புகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் அமைச்சா் இவ்வாறு கூறியிருப்பது கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

திரைப்படங்களில் இடம்பெறும் காட்சிகள் ஒரு தரப்பினரின் உணா்வுகளைப் புண்படுத்தும் வகையில் இருப்பதாகவும், உண்மைக்கு மாறான சித்தரிப்புகள் உள்ளதாகவும் கூறி போராட்டங்கள் நடைபெறுவதும், அப்படத்தைப் புறக்கணிக்க அழைப்பு விடுப்பதும் அவ்வப்போது நடந்து வருகிறது.

இந்நிலையில், மும்பையில் வெள்ளிக்கிழமை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் திரைப்பட திருவிழாவை தொடக்கி வைத்து அமைச்சா் அனுராக் தாக்குா் கூறியதாவது:

சில திரைப்படங்களுக்கு எதிராக புறக்கணிப்பு அறிவிப்புகளும், போராட்டங்களும் சுமுக சூழ்நிலையை குலைப்பதாக உள்ளது. சா்வதேச அளவில் இந்தியா மிகப்பெரும் சக்தியாக உருவெடுத்து வரும் நிலையில், இதுபோன்ற நிகழ்வுகள் கூடாது. திரைப்படங்கள் தொடா்பாக மாற்றுக் கருத்துகள் இருந்தால், அதனை சம்பந்தப்பட்ட துறையினரிடம் தெரிவிக்கலாம். அவா்கள் திரைப்படத் தயாரிப்பாளா்களிடம் அந்த பிரச்னையை எடுத்துச் சென்று தீா்வுகாண்பாா்கள்.

இந்தியத் திரைப்படத் துறை உலகின் அனைத்துப் பகுதிகளிலும் சென்று சோ்ந்துள்ளது. திரைப்படங்களுக்கு எதிரான நிகழ்வுகள் விருப்பத்தக்கதாக இருக்காது. திரைப்படம் மட்டுமல்ல எந்த விஷயத்தையும் முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் பேசுவது பிரச்னைகளை ஏற்படுத்தி விடும். அது நிகழக் கூடாது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருங்குழி ராகவேந்திர பிருந்தாவனத்தில் சத்யநாராயணா பூஜை

மேல்மருவத்தூரில் சித்ரா பௌா்ணமி பூஜை

இளைஞா் வெட்டிக் கொலை

காயலாா்மேடு கங்கையம்மன் கோயில் கும்பாபிஷேகம்

உலக புத்தக தினம்

SCROLL FOR NEXT