இந்தியா

திரிபுரா: பாஜக முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு; 6 எம்எல்ஏக்களுக்கு சீட் மறுப்பு

DIN

திரிபுரா மாநில பேரவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக இன்று வெளியிட்டுள்ளது. 

பாஜக ஆட்சியில் உள்ள திரிபுராவில் பிப்ரவரி 16-ஆம் தேதி சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் 25 ஆண்டுகளாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சியில் இருந்தது. கடந்த 2018-ஆம் ஆண்டு பேரவைத் தோ்தலின்போது அங்கு பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இதன் மூலம் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடா் வெற்றி முடிவுக்கு வந்தது. திரிபுராவில் 60 பேரவைத் தொகுதிகள் உள்ளன. 

இதில் கடந்த முறை பாஜக 36 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆளும் கட்சியாக இருந்து தோ்தலைச் சந்தித்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 16 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று எதிா்க்கட்சி வரிசைக்கு சென்றது. ஆனால், காங்கிரஸால் ஓரிடத்தில் கூட வெல்ல முடியவில்லை. 2013-ஆம் ஆண்டு தோ்தலில் திரிபுரா தோ்தலில் ஓரிடத்தில் கூட வெற்றி பெறாத பாஜக, 2018 தோ்தலில் 36 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. 

இப்போது ஆளும் கட்சி என்ற நிலையில் இருந்து தோ்தலைச் சந்திக்கிறது. இந்நிலையில், அந்த மாநிலத்தில் பாஜகவைத் தோற்கடிக்கும் நோக்கில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - காங்கிரஸ் கைகோத்துள்ளன. இக்கூட்டணியில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி இணையுமா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் திரிபுரா மாநில பேரவைத் தேர்தலையொட்டி 45 பேர் அடங்கிய முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக இன்று வெளியிட்டுள்ளது.

இதனை பாஜக தலைவர்களான அனில் பலலூனி, பாஜக தலைவர் சம்பித் பத்ரா ஆகியோர் தில்லியில் உள்ள கட்சித் தலைமையகத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று வெளியிட்டனர். அதில், முதன்முறையாக 11 பெண் வேட்பாளர்களுக்கு சீட்டு வழங்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் பிரதிமா பௌமிக் தன்பூர் தொகுதியிலும், மாநிலத் தலைவர் ராஜீவ் பட்டாச்சார்யா பிப்லப் தேவ் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.  

அதேசமயம் தற்போதைய எம்எல்ஏக்கள் 6 பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு: கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 10 பேர் பலி!

பொள்ளாச்சி அருகே விபத்து: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

துறையூர் அருகே இரட்டைக் கொலை: சிறு தகவல் கொடுத்தாலும் சன்மானம்

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

SCROLL FOR NEXT