இந்தியா

ரூ.366 கோடி ஜிஎஸ்டி முறைகேடு செய்ததாக சாலையோர வியாபாரி மீது புகார்: என்ன நடந்தது?

DIN


ஆக்ரா: உத்தரப்பிரதேச மாநிலம் முசாஃபர்நகரைச் சேர்ந்த சாலையோர வியாபாரி மீது, ரூ.366 கோடி ஜிஎஸ்டி முறைகேடு செய்திருப்பதாகக் குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சாலையோரம் துணிகளை விற்று நாள்தோறும் ரூ.500 வருவாய் ஈட்டிவரும் வியாபாரியை, ஜிஎஸ்டி அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்துள்ளனர்.

எஸாஸ் அகமது என்ற அந்த வியாபாரி, ஜிஎஸ்டி அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து தனது நிலையை தெளிவுபடுத்தியிருக்கிறார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பழைய இரும்புச் சாமான்களை வாங்கும் கடையை அவர் தொடங்கியிருக்கிறார். அப்போது ஜிஎஸ்டி எண் வாங்கியிருக்கிறார். நாள்தோறும் ரூ.500 முதல் 1000 ரூபாய் வரை வருமானம் வந்துள்ளது. பிறகு அது நட்டத்தில் போனதால், அந்தக் கடையை மூடிவிட்டு, சாலையோரம் துணி விற்பனை செய்யும் வேலையில் ஈடுபட்டுள்ளார்.

அப்போதே, தனது ஜிஎஸ்டி எண்ணை முடித்துக் கொடுக்குமாறு சார்ட்டர்ட் அக்கவுண்ட்டிடம் கேட்டுக் கொண்டுள்ளார். அதன்பிறகு அந்த எண்ணை அவர் பயன்படுத்தவும் இல்லை.

தற்போது, அந்த எண்ணைப் பயன்படுத்தி யாரோ முறைகேடு செய்திருப்பதாகக் குற்றச்சாட்டுப் பதிவாகி, அதற்காக ஜிஎஸ்டி அதிகாரிகள் அகமது வீட்டின் கதவைத் தட்டியிருக்கிறார்கள்.

இது குறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவது என்னவென்றால், இந்த ஜிஎஸ்டி எண்ணைப் பயன்படுத்தி சுமார் ரூ.300 கோடிக்கு மேலான பொருள்களுக்கு ரசீது வழங்கப்பட்டுள்ளது. அப்படிப்பார்த்தால் இது மிகப்பெரிய மோசடி என்றும் இதன் கீழ் பல நிறுவனங்களும், பல மோசடி கும்பல்களும் இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

சாலையோர வியாபாரியின் வீட்டையும் காவல்துறையினர் சோதனை நடத்தியிருக்கிறார்கள். இதுபோல வேறொருவருடைய பயன்படுத்தாத ஜிஎஸ்டி எண்ணைக் கொண்டு மோசடிகள் நடைபெற்று வருவது அதிகரித்திருப்பதால், வியாபாரிகளுக்கு காவல்துறையினர் கவனமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகரிக்க வாய்ப்பு?

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT