இந்தியா

ராமர் கோயில் இருக்கிறதே தவிர ராமராஜ்யம் இல்லை என்கிறார் இவர்!

PTI

அயோத்தியில் ராமர் கோயில் வந்தாலும், நாட்டில் ராமராஜ்யம் இல்லை என்று அந்தராஷ்டிரிய இந்து பரிஷத் தலைவர் பிரவின் தொகாடியா சனிக்கிழமை தெரிவித்தார். 

வெள்ளிக்கிழமை மாலை ப்யூரே ராம்தீன் கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய தொகாடியா,

அயோத்தியில் ராமர் கோயில் வருகிறது, ஆனால் வந்திருக்க வேண்டிய 'ராமராஜ்யம்' எங்கும் காணப்படவில்லை.

நாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான இந்துக்களுக்கு வீடுகளும், குந்தைகளுக்கு நல்ல கல்வி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, விவசாயிகளுக்கு தங்கள் பயிர்களுக்கு நல்ல விலை இவையெல்லாம் கிடைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். 

இந்துக்கள் அனைவரையும் விழிப்படையச் செய்ய ஒன்றாக உழைத்து ராமர் கோயில் கட்டுவதற்கான பிரசாரத்தைத் தொடங்கினார்கள். 

இந்துக்கள் கிராமம் கிராமமாகச் சென்று மக்களின் ஆதரவையும், நன்கொடைகளையும் பெற்று ராமர் கோயில் கட்ட வேண்டுமென்று தொகாடியா கூறினார். 

நாட்டில் இந்துக்கள் வளமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என்பதே தனது பிரசாரம் என்றார்.

நமது நாடு செழிப்பாக இருக்க, இந்துக்களின் இழந்த செழிப்பை மீட்டெடுக்க அனைத்து இந்துக்களும் முன்வர வேண்டும் என்று அவர் கூறினார்.

முசாஃபிர்கானாவில் நடந்த மற்றொரு நிகழ்ச்சியிலும் தொகாடியா பங்கேற்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதி நிறுவன ஊழியரிடம் வழிப்பறி: 2 சிறுவா்கள் உள்பட 6 போ் கைது

சிறைவாசிகளுக்கு சிறப்பு நீதிமன்றம்: 5 போ் விடுதலை

வாக்குச் சாவடி மையங்களின் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு

100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி பேரணி

திருப்பூா் தொகுதியில் 15 வேட்பாளா்களின் வேட்பு மனுக்கள் ஏற்பு

SCROLL FOR NEXT