இந்தியா

வந்தேபாரத் ரயில்களில் தூய்மை செய்யும் முறை மாற்றப்பட்டது: மத்திய ரயில்வே அமைச்சர்

DIN

வந்தேபாரத் ரயில்களில் தூய்மை செய்யும் முறை மாற்றப்பட்டது என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். 

‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின்கீழ் முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன ரயிலான வந்தே பாரத், ஏற்கெனவே நாட்டின் பல்வேறு பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்டு இயங்கி வருகிறது. அத்தகையை சிறப்பு வாய்ந்த ரயிலை பயணிகள் தூய்மையாக வைத்துக்கொள்வதில்லை என்கிற புகார் எழுந்துள்ளது. மேலும் இதுதொடர்பான புகைப்படங்களும் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. 

அண்மையில் தொடங்கப்பட்ட செகந்திராபாத்-விசாகப்பட்டினம் வந்தே பாரத் விரைவு ரயிலில் பிளாஸ்டிக் தட்டுகள், கோப்பைகள் மற்றும் பிற குப்பைகள் சிதறிக்கிடந்ததாக செய்திகள் வந்தன. ஊழியர்கள் சீரான இடைவெளியில் தங்கள் தூய்மைப்  பணியைச் செய்தபோதும், விசாகப்பட்டினம் வந்தடைந்தபோது ரயில் அழுக்காக இருந்தது என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ரயில்வே அமைச்சரிடம் சில இணையப் பயனாளர்கள் வலியுறுத்தினர்.

இந்த நிலையில் வந்தேபாரத் ரயில்களில் தூய்மை செய்யும் முறை மாற்றப்பட்டது என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், வந்தேபாரத் ரயில்களில் தூய்மை செய்யும் முறை மாற்றப்பட்டது. உங்கள் ஒத்துழைப்பு எதிர்பார்க்கப்படுகிறது," என்று அவர் பதிவிட்டுள்ளார். மேலும் விமானங்களில் மேற்கொள்ளப்படும் துப்புரவு செயல்முறையை பின்பற்ற வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே புகழ்பெற்ற ரயிலை தூய்மையாக வைத்திருக்க குப்பைகளை குப்பைத் தொட்டிகளில் போட வேண்டும் என பயணிகளுக்கு ரயில்வே துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு யோகம்!

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.2.24 லட்சம் மோசடி

‘தனியாா் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை’

கோழிப் பண்ணையில் திடீா் தீ

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT