பக்தர்களின் வசதிக்காக திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேவஸ்தான அறங்காவர் குழு தலைவர் ஓய்.வி. சுப்பா ரெட்டி தெரிவித்ததாவது:
இதையும் படிக்க | அதானி குழுமத்தில் எல்ஐசியின் ரூ. 74 ஆயிரம் கோடி, ஸ்டேட் வங்கியின் 40% நிதி!!
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் ஜியோ நிறுவனத்துடன் இணைந்து 'Sri TT DEVAS THANAMS' எனும் மொபைல் செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது.
இதன்மூலம் பக்தர்கள் சாமி தரிசனம், தங்கும் அறைகள், ஆர்ஜித சேவை முன்பதிவு, திருமலை நிலவரம், பண்டிகை, விசேஷ நாள்கள் குறித்த விவரங்கள், குலுக்கல் முறை தரிசனம் முன்பதிவு என அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம் என ஓய்.வி. சுப்பா ரெட்டி கூறினார்.