இந்தியா

பலாத்காரத்துக்கு உள்ளான குழந்தையின் கல்விக்கு உதவ முன்வந்த காவல்துறை

28th Jan 2023 06:09 PM

ADVERTISEMENT


மும்பை: பள்ளி வளாகத்திலேயே பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான 5 வயது குழந்தையின் கல்விக்கு உதவ மும்பை காவல்துறையினர் முன் வந்துள்ளனர்.

இது குறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது, 15 வயது சிறுவனால் 5 வயது குழந்தை பள்ளி வளாகத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், குழந்தை மிகவும் ஏழ்மையான நிலையில் இருப்பதை அறிந்த காவல்துறையினர், நிதி திரட்டி ரூ.1.11 லட்சத்தை வங்கியில் செலுத்தியிருக்கிறார்கள். இந்தப் பணத்தைக் கொண்டு அந்தக் குழந்தை 10ஆம் வகுப்பு வரை எந்த சிக்கலும் இல்லாமல் கல்வி கற்க உதவும் என்றும், குழந்தையை நல்ல பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Tags : mumbai police
ADVERTISEMENT
ADVERTISEMENT