இந்தியா

பிகாரில் மத்திய அமைச்சரின் சகோதரர் மருத்துவமனையில் மரணம்: மருத்துவர்கள் இல்லாததே காரணமா? 

DIN



பிகாரில் மத்திய அமைச்சர் அஷ்வின் சௌபேயின் சகோதரர் நிர்மல் சௌவே மருத்துவமனையின் தீவிர சிகிச்சை உயிரிழந்த  நிலையில், மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என நிர்மல் சௌவே உறவினர்களின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து இரண்டு மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பிகாரின் பாகல்பூர் நகரின் ஆதம்பூரில் மத்திய அமைச்சர் அஷ்வின் சௌபேயின் சகோதரர் நிர்மல் சௌவே குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். வெள்ளிக்கிழமை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவரது குடும்பத்தினர் அவரை உயிருக்கு ஆபத்தான நிலையில் மாயாகஞ்ச் மருத்துவமனையில் அனுமதித்தனர்.  கடுமையான மாரடைப்பால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு மூத்த மருத்துவரின் தேவையான சிகிச்சைக்கு பின்னர் அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். ஆனால், அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இந்நிலையில், சௌபேயின் உயிரிழப்புக்கு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் இல்லாதது மற்றும் மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என அவரது உறவினர்கள் குற்றம் சாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

தகவல் அறிந்து மருத்துவமனைக்கு விரைந்து வந்த பாகல்பூர் நகர காவல் கண்காணிப்பாளர் அஜய் குமார் சௌத்ரி, சௌபேயின் உறவினர்களை சமாதானம் செய்து, குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவர்களை தப்பிச் செல்லும் வகையில் குழப்பத்தை ஏற்படுத்தினால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று சௌத்ரி உறுதியளித்தார்.

இதனைத் தொடர்ந்து மருத்துவமனையின் இரண்டு மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை கண்காணிப்பாளர் அசிம் கிஆர் தாஸ் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளி மாநிலத் தோ்தல்: நிறுவனங்கள் விடுமுறை அளிக்காவிட்டால் புகாா் செய்யலாம்

காசோலை மோசடி வழக்கில் ஆசிரியருக்கு நீதிமன்றம் உத்தரவு

ஐ.நா.வில் ‘மறைமுக வீட்டோ’: சீனா மீது இந்தியா விமா்சனம்

‘காவிரி பிரச்னையில் கா்நாடக அரசு கபடநாடகம்’

மண் வளத்தை பாதுகாக்க மண் பரிசோதனை அவசியம்

SCROLL FOR NEXT