இந்தியா

ஔரங்காபாத்தில் 162 நாட்டு வெடிகுண்டுகள் கண்டெடுப்பு

DIN

பிகாரில் மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட ஔரங்காபாத்தில் 162 நாட்டு வெடிகுண்டுகளை கண்டெடுத்து அழித்துள்ளனர். 
இதுகுறித்து சிஆர்பிஎஃப் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சட்டவிரோத மாவோயிஸ்டுகளுக்கு எதிராக சிஆர்பிஎஃப் மற்றும் பிகார் காவல்துறையின் மேற்கொண்டு வரும் தீவிர நடவடிக்கைகளால், மாநிலம் இயல்பு நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது. 
முன்னதாக மாவோயிஸ்டுகளின் கோட்டையாக கருதப்பட்ட பகுதிகளில், மாவோயிஸ்டுகளால் புதைக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டுகளை அகற்றுதல் மற்றும் அவசரமாக தப்பிச் செல்லும் போது அவர்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை மீட்கும் நோக்கத்துடன் நடவடிக்கைகள் தொடர்கின்றன. 

ஜனவரி 27 ஆம் தேதி ஔரங்காபாத் லதுய்யா பஹாட் பகுதியில் சிஆர்பிஎஃப் மற்றும் பிகார் காவல்துறை நடத்திய இதுபோன்ற ஒரு தேடுதல் மற்றும் அழிப்பு நடவடிக்கையில், 13 நாட்டு வெடிகுண்டுகள் ஆரம்பத்தில் கண்டறியப்பட்டன. 
அவற்றை அந்த இடத்திலேயே அழித்துவிட்டு மேலும் நடவடிக்கையைத் தொடர்ந்தனர். அப்போது ஒரு குகைக்கு அருகில் சென்று குகையை ஸ்கேன் செய்தபோது, ​​ஒவ்வொன்றும் சுமார் ஒரு கிலோ எடையுள்ள 149 நாட்டு வெடிகுண்டுகள் மீட்கப்பட்டன. பின்னர் பரிந்துரைக்கப்பட்ட பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளைக் கடைப்பிடித்து அந்த நாட்டு வெடிகுண்டுகளையும் அவர்கள் அழித்தனர்,". இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT