இந்தியா

மாநிலங்கள் கடன் வாங்குவதில் மத்திய அரசு தலையிடுவது ஏன்? நிதிஷ்குமார் கேள்வி

DIN



பாட்னா: மாநிலங்கள் கடன் வாங்குவதில் மத்திய அரசு தலையிடுவது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ள பிகார் முதல்வர் நிதிஷ்குமார், “நம்மைப் போன்ற ஏழை மாநிலங்கள் தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ள வேண்டிய நிலை உள்ளது” என்று நிதிஷ் குமார் கூறினார்.

பிகாரில் பாஜக உடன் கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்தித்து ஆட்சி அமைத்த ஐக்கிய ஜனதாதளம் கட்சி தலைவரும், முதல்வருமான நிதிஷ்குமார், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பே (ஆகஸ்டு) திடீரென பாஜக உடனான கூட்டணியை முறித்துக்கொண்டு, ராஷ்டிரீயஜனதாதளம், காங்கிரஸ் மெகா கூட்டணியில் சேர்ந்து புதிய அரசை அமைத்தார்.

வரும் மக்களவைத் தேர்தலில், மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒரே அணியில் இணைக்கும் முயற்சியில் ஈடுபடப்போவதாக நிதிஷ்குமார் அறிவித்தார்.

இந்த நிலையில் பாட்னாவில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவரிடம் வரவிருக்கும் மத்திய பட்ஜெட்டில் என்ன எதிர்பார்க்கிறீர்கள்? என்று செய்தியாளர்களின் கேள்விகளுக்கு, "ஒருவர் என்ன எதிர்பார்க்க முடியும்" என்றவர், பிகாருக்கு மத்திய அரசு பெரிய அளவில் உதவ வேண்டும், சிறப்பு தகுதி வழங்க வேண்டும் என்ற  தனது கோரிக்கைகள் இன்னும் நிறை வேற்றப்படவில்லை என்று கூறினார்.

மத்தியில் ஆளும் கூட்டணியில் இருந்து நீங்கள் வெளியேறிய பிறகு நிலைமை மோசமாக மாறிவிட்டதா? என்ற கேள்விக்கு, நாங்கள் கூட்டணியில் ஒன்றாக இருந்த போதும் அவர்கள் மாநிலத்துக்கு என்று எதையும் செய்தது இல்லை. அவர்கள் இப்போதும் அதைத்தான் செய்கிறார்கள். ஏழ்மை நிலையில் உள்ள மாநிலங்களை முன்னேற்றாமல், அவர்கள் நாட்டை முன்னேற்றுவது குறித்து எப்படி எண்ண இயலும் என்பது எனக்கு வியப்பாக உள்ளது. 

அவர்கள் பிரசாரத்தில் ஈடுபடுவதைத் தவிர வேறு எதையும் செய்வதில்லை. அவர்கள் சில அரசியல் ஆதாயம் எதிர்பார்க்கிற இடங்களில் மட்டுமே தங்கள் கவனத்தைச் செலுத்துகிறார்கள். இருப்பினும் அவர்கள் தங்கள் அரசியல் லாபங்கள் குறித்து மிகையாக மதிப்பிடுவது போல தெரிகிறது.

மாநிலங்கள் கடன் வாங்குவதில் மத்திய அரசு தலையிடுவதாக குற்றம்சாட்டிய நிதிஷ் குமார், “எங்களைப் போன்ற ஏழை மாநிலங்கள் தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ள வேண்டிய நிலை உள்ளது.” முன்பு மத்திய நிதி இல்லாதபோது அதைக் கடன் வாங்கியே ஈடுகட்டினோம். இப்போது அதுவும் நிறுத்தப்பட்டு விட்டது. இதுபோன்ற மத்திய அரசின் தலையீட்டை நாங்கள் ஒருபோதும் பார்த்ததில்லை" என்று நிதிஷ்குமார் பதில் அளித்தார்.

அடுத்த நிதியாண்டில் இருந்து மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.5 சதவிகிதமாக மாநிலங்கள் கடன் வாங்குவதற்கான முன்மொழியப்பட்ட வரம்பைக் குறிப்பிடும் வகையில் பேசியவர், ரயில்வே துறையின் தனி பட்ஜெட் புதுப்பிக்கப்பட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தியவர், ஒரு வகையில், நவீன இந்தியப் பொருளாதாரம் அதன் வேர்கள் ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட ரயில்வேயில் உள்ளது," என்று நிதிஷ்குமார் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

SCROLL FOR NEXT