இந்தியா

உலகப் பணக்காரர்களில் 7ஆம் இடத்துக்குத் தள்ளப்பட்ட கௌதம் அதானி 

DIN

இந்தியா மற்றும் ஆசியாவின் மிகப் பணக்காரர்களில் ஒருவரான கௌதம் அதானியின் அதானி குழுமப் பங்குகள் வீழ்ச்சியடைந்ததன் காரணமாக, உலகப் பணக்காரர்கள் பட்டியலில் கௌதம் அதானி 7-ஆம் இடத்துக்குத் தள்ளப்பட்டார்.

அதானி குழுமப் பங்குகள் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை காலை கடும் சரிவுடன் வர்த்தகமானதைத் தொடர்ந்து அதானியின் சொத்து மதிப்பு சரிந்து, ஏழாம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஃபோர்ப்ஸ் வெளியிட்டிருக்கும் பணக்காரர்களின் பட்டியலில், வெள்ளிக்கிழமை காலை பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கியதும்,  அதானியின் சொத்து மதிப்பு 18 பில்லியன் டாலர்கள் சரிந்து 100 பில்லியன் டாலர்களாகக் குறைந்தது. இதன் காரணமாக, உலகப் பணக்காரர்கள் பட்டியலில், மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸுக்கு அடுத்த இடத்தில் உள்ளார். பில் கேட்ஸ் சொத்து மதிப்பு 104 பில்லியன் டாலர்கள்.

கடந்த ஆண்டு அதானி குழுமத்தின் பங்குகள் மிகப்பெரிய உயர்வை சந்தித்த போது, அதானி, உலகப் பணக்காரர்களில் இரண்டாம் இடத்தைப் பிடித்திருந்தார். அதன்பிறகும் கூட, மிக நீண்ட காலம் மூன்றாவது இடத்திலேயே அதானி நீடித்திருந்தார். 

அதானியின் தொழில் போட்டியாளரும், ரிலையன்ஸ் நிறுவனருமான முகேஷ் அம்பானி, 83 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன், பணக்காரர்கள் பட்டியலில் 11வது இடத்தில் உள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பா்க் ரிசா்ச் நிறுவனம் கடந்த புதன்கிழமை வெளியிட்ட ஆய்வு அறிக்கையில், அதானி குழுமத்தைச் சோ்ந்த 7 முக்கிய நிறுவனங்கள் தங்களது நிதிநிலையை உண்மைக்குப் புறம்பான முறையில் வலுவாகக் காட்டுவது, அதன் மூலம் பங்குச் சந்தையை ஏமாற்றி லாபம் பாா்த்தது, வெளிநாடுகளில் ஷெல் நிறுவனங்களை உருவாக்கி அவற்றின் மூலம் சட்டவிரோத பணப் பரிவா்த்தனையில் ஈடுபட்டது உள்ளிட்ட பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

அந்த அறிக்கை வெளியானதன் எதிரொலியாக, பங்குச் சந்தையில் அதானி குழும பங்குகளின் மதிப்பு புதன்கிழமை வீழ்ச்சியடைந்தது. ரூ.20,000 கோடி மதிப்பிலான அந்தக் குழும பங்குகளை முதலீட்டாளா்கள் விற்பனை செய்தனா். இதுவே வெள்ளிக்கிழமையும் நீடிக்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

SCROLL FOR NEXT