இந்தியா

மக்கள் பயன்பெறும் வகையில் 400 புதிய மருத்துவமனைகளை திறந்து வைத்த அரவிந்த் கேஜரிவால்

27th Jan 2023 04:06 PM

ADVERTISEMENT

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மற்றும் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் 400 புதிய சிறிய ஆம் ஆத்மி மருத்துவமனைகளை பஞ்சாப் மக்களுக்காக திறந்து வைத்தனர். 

இந்த புதிய சிறிய மருத்துவமனைகள் திறக்கப்பட்டதன் மூலமாக பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சிறிய ஆம் ஆத்மி மருத்துவமனைகளின் எண்ணிக்கை 500 ஆக அதிகரித்துள்ளது. 

இதையும் படிக்க: ஷ்ரத்தாவைக் கொன்றுவிட்டு அஃப்தாப் செய்த துணிச்சலான செயல்

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அரவிந்த் கேஜரிவால் பேசியதாவது: பஞ்சாபில் உள்ள ஆம் ஆத்மி அரசு 10 மாதங்களில் 500 மோகல்லா மருத்துவமனைகளை திறந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த 500 மருத்துவமனைகள் போன்று மக்களுக்கு இன்னும் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தி தரப்பட உள்ளன என்றார்.

ADVERTISEMENT

இந்த நிகழ்ச்சியில் பஞ்சாப் மருத்துவத் துறை அமைச்சர் பல்பீர் சிங் மற்றும் ஆம் ஆத்மியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகவ் சத்தா ஆகியோர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT