இந்தியா

பிபிசி ஆவணப்படம்: தில்லி பல்கலைக்கழக வளாகத்தில் 144 தடை; மாணவர்கள் போலீசாரிடையே தள்ளுமுள்ளு

27th Jan 2023 07:40 PM

ADVERTISEMENT

தில்லி பல்கலைக்கழக மாணவர்கள் வளாகத்தில் 144 தடை உத்தரவை மீற முயன்ற மாணவர்களை தடுத்து நிறுத்தியதால் மாணவர்கள் போலீசாரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

2002 குஜராத் கலவரத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு நேரடித் தொடர்பு உள்ளதாக பிபிசி வெளியிட்டு பிறகு நீக்கப்பட்டதாகக் கூறப்பட்ட ஆவணப்படம் தொடர்ந்து இணையவெளியில் இருந்து வருகிறது. 

பிபிசியின் ஆவணப்படம் 

''இந்தியா: மோடி மீதான கேள்வி'' (பகுதி -1) என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள ஆவணப்படத்தில் 2002ஆம் ஆண்டு பிப்ரவரி - மார்ச் மாதத்தில் நடைபெற்ற குஜராத் கலவரம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணை மற்றும் மோடி ஆட்சியில் இந்திய முஸ்லிம்களின் நிலை குறித்து ஆவணப்படுத்தப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

இதனையடுத்து, இந்த ஆவணப்படத்தின் பகுதி-2 அண்மையில் வெளியானது.

இதையும் படிக்க: வீழ்ச்சிப் பாதையில் அதானி குழும பங்குகள்! ரூ. 4.17 லட்சம் கோடி  இழப்பு!!

இந்த ஆவணப்படத்தை இந்தியாவில் பல்வேறு பகுதிகளிலும் பல்கலைக்கழக மாணவர்கள் திரையிட முயற்சி செய்து வருகின்றனர்.  திரையிட அனுமதி மறுக்கப்படும் பட்சத்தில் சில இடங்களில் தங்களது கைப்பேசிகள் மூலமாகவும், மடிக்கணினி மூலமாகவும் ஆவணப்படத்தை குழுவாக பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்தியாவில் தடை செய்த ஆவணப்படத்தை தில்லி  பல்கலைக்கழக வளாகத்தில் திரையிட திட்டமிட்டது முக்கியத்துவம் பெறுகிறது.

ஆவணப்படத்தை மாணவர்கள் திரையிட திட்டமிட்டுள்ளதற்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மாணவர்கள் மீற முயன்றதால் மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனால், தில்லிப் பல்கலைக்கழக வளாகம் பரபரப்புடனேயே காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT