இந்தியா

வீழ்ச்சிப் பாதையில் அதானி குழும பங்குகள்! ரூ. 4.17 லட்சம் கோடி  இழப்பு!!

27th Jan 2023 07:06 PM

ADVERTISEMENT

அதானி குழும நிறுவனங்களின் பங்குகளின் விலை மதிப்புகள் தொடர்ந்து  வெள்ளிக்கிழமையும் பெரும் வீழ்ச்சியடைந்தன.

அதானி டோட்டல் கேஸ், அதானி டிரான்ஸ்மிஷன், அதானி கிரீன் டேங்க் பங்குகள் 20 சதவிகித விலை சரிந்தன.

அதானி குழுமத்தின் கடுமையான மோசடிப் புகார்களை அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் அம்பலப்படுத்தியதைத்  தொடர்ந்து, இந்தக் குழும நிறுவன பங்குகளின் மதிப்பில் 4.17 லட்சம் கோடி  இழப்பு ஏற்பட்டுள்ளது.

அதானி டோட்டல் கேஸ் 20 சதவிகிதமும் அதானி டிரான்ஸ்மிஷன் 19.99 சதவிகிதமும்  அதானி என்டர்பிரைசஸ் 18 சதவிகிதமும் அடிவாங்கின.

ADVERTISEMENT

கடந்த இரு நாள்களில் அதானி குழும நிறுவனங்கள் தங்கள் சந்தை மதிப்பில்  4.17 லட்சம் கோடி இழப்பைச் சந்தித்துள்ளன.

அதானி குழுமத்தின் பெரும்பாலான நிறுவனங்களும் பெரும் நஷ்டத்தைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன.

ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தொடரப்படும் என்று அதானி குழுமம் அறிவித்த நிலையில், அதனை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் தங்களுடைய 88 கேள்விகளில் ஒன்றுக்குக்கூட அதானி குழுமம் பதிலளிக்கவில்லை என்றும் ஹிண்டன்பர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT