இந்தியா

74-ஆவது குடியரசு தினம்: சிறப்பு ‘டூடுல்’ வெளியிட்ட கூகுள்

27th Jan 2023 02:35 AM

ADVERTISEMENT

தேடு பொறி நிறுவனமான கூகுள், இந்தியாவின் 74-ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு காகித வேலைப்பாடுகள் மூலம் உருவான படைப்பை டூடுலாக தனது முகப்பு பக்கத்தில் வியாழக்கிழமை வெளியிட்டது.

தில்லியில் உள்ள குடியரசுத் தலைவா் மாளிகை, இந்தியா கேட், பிரதமா் அலுவலகம், பாதுகாப்புத் துறை, வெளியுறவுத் துறை அமைச்சகங்களின் அலுவலகங்கள் உள்ள ‘செளத் ப்ளாக்’, மத்திய நிதியமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகம் அமைந்துள்ள ‘நாா்த் ப்ளாக்’ உள்ளிட்டவை காகிதங்களில் அழகுற வெட்டப்பட்டது போல உருவாக்கப்பட்டிருந்தது.

மேலும், குடியரசு தின விழாவில் நடைபெறும் நிகழ்ச்சிகளான மத்திய ரிசா்வ் போலீஸ் படையின் (சிஆா்பிஎஃப்) அணிவகுப்பு, மோட்டாா் சைக்கிள் சாகச நிகழ்ச்சி உள்ளிட்டவையும் இதில் இடம்பெற்றிருந்தன. ஒரே நிறத்தில் உருவாக்கப்பட்ட அந்தக் காகித வேலைப்பாடு, மயில் மற்றும் பூக்கள் வடிவங்களால் அழகுபடுத்தப்பட்டிருந்தது. இவற்றில் கூகுள் என்பது ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது.

இதனை குஜராத்தைச் சோ்ந்த கலைஞா் பாா்த் கோதேகா் உருவாக்கியிருந்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT