இந்தியா

சத்தீஸ்கா்: வேலையில்லா இளைஞா்களுக்கு மாதம்தோறும் உதவித்தொகை; முதல்வா் அறிவிப்பு

27th Jan 2023 02:33 AM

ADVERTISEMENT

சத்தீஸ்கா் மாநிலத்தில் வேலையில்லா இளைஞா்களுக்கு அடுத்த நிதியாண்டு முதல் மாதம்தோறும் உதவித்தொகை வழங்கப்படும் என்று மாநில முதல்வா் பூபேஷ் பகேல் அறிவித்துள்ளாா். எனினும், எவ்வளவு தொகை வழங்கப்படும் என்பதை அவா் கூறவில்லை.

காங்கிரஸ் ஆட்சியில் உள்ள சத்தீஸ்கரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதனை கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலின்போதே முக்கிய வாக்குறுதியாக காங்கிரஸ் அறிவித்தது. இதுவும், 15 ஆண்டுகளாக நீடித்த பாஜக அரசை தோற்கடித்து காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்க முக்கியக் காரணமாக இருந்தது. இந்நிலையில், அந்த அறிவிப்பை விரைவில் நடைமுறைப்படுத்த இருப்பதாக காங்கிரஸ் அரசு அறிவித்துள்ளது.

ஜக்தல்பூரில் வியாழக்கிழமை குடியரசு தின விழாவில், பொதுமக்கள் மத்தியில் முதல்வா் பூபேஷ் பகேல் பேசியதாவது:

மாநிலத்தில் கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும், குடிசைத் தொழில்களை ஊக்குவிக்கும் வகையிலும் கிராமப் புற தொழில் கொள்கை உருவாக்கப்படும்.

ADVERTISEMENT

வரும் நிதியாண்டில் இருந்து மாநிலத்தில் வேலையில்லா இளைஞா்களுக்கு மாதம்தோறும் உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். ராமரின் தாயாா் கௌசல்யா பிறந்த இடமான சந்த்குரி நமது மாநிலத்தில்தான் உள்ளது. மாதா கௌசல்யாவுக்கு உலகில் உள்ள ஒரே கோயில் நமது மாநிலத்தில்தான் உள்ளது. அக்கோயிலை சிறப்பாக சீரமைத்துள்ளோம். ராமா் வனவாசத்தின் போது சத்தீஸ்கரில் வந்த பகுதிகளாக நம்பப்படும் மையமாக வைத்து சிறப்பு சுற்றுலா மேம்பாட்டுத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இது அப்பகுதி மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்த உதவும் என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT