இந்தியா

தேசியக் கொடியை ஏற்றினார் தெலங்கானா ஆளுநர்!

26th Jan 2023 11:43 AM

ADVERTISEMENT

 

குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் மாளிகையில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் சாந்திகுமார், டிஜிபி அஞ்சனிகுமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

சமீபத்தில் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் இருந்து கோல்டன் குளோப் விருது பெற்ற பிரபல தெலுங்கு இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி, பாடலை எழுதிய பாடலாசிரியர் சந்திரபோஸ், டேபிள் டென்னிஸ் வீராங்கனை அகுல ஸ்ரீஜா, ஐ.ஏ.எஸ். ஆர்வலர்களுக்கு பயிற்சி அளிக்கும் எம்.பால லதா, கே.லோகேஸ்வரி ஆகியோரை ஆளுநர் பாராட்டினார்.

ADVERTISEMENT

படிக்க: தேசியக் கொடியேற்றினார் குடியரசுத் தலைவர்!

மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, குடியரசு தின விழாவை விழா அணிவகுப்புடன் பிரமாண்டமாக நடத்த மாநில அரசுக்கு தெலங்கானா உயர் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. 

தெலங்கானாவில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற குடியரசு நாள் விழாவில் முதல்வர் சந்திரசேகர் ராவ் புறக்கணித்ததைத் தொடர்ந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT