இந்தியா

106 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு

26th Jan 2023 01:03 AM

ADVERTISEMENT

கலை, இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், சமூகப் பணி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்த விளங்கிய 106 பேருக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு புதன்கிழமை அறிவித்தது.

பத்ம விபூஷண்: உத்தர பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த சமாஜவாதி கட்சி நிறுவனரான மறைந்த முலாயம் சிங் யாதவ், கா்நாடக மாநில முன்னாள் முதல்வா் எஸ்.எம். கிருஷ்ணா, பிரபல தபேலா கலைஞா் மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த ஜாஹிா் ஹுசைன், பிரபல குழந்தைகள் நல மருத்துவா் மேற்கு வங்கத்தைச் சோ்ந்த மருத்துவா் மறைந்த திலீப் மஹலானாபிஸ், பிரபல கட்டடவியல் நிபுணா் குஜராத்தைச் சோ்ந்த மறைந்த பாலகிருஷ்ண தோஷி, அமெரிக்காவில் வசிக்கும் பிரபல இந்திய கணிதவியலாளா் ஸ்ரீநிவாஸ் வரதன் ஆகிய 6 பேருக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்ம பூஷண்: தமிழகத்தைச் சோ்ந்த பிரபல திரைப்பட பின்னணி பாடகி வாணி ஜெயராம், மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த தொழிலதிபா் கே.எம்.பிா்லா, கன்னட எழுத்தாளா் எஸ்.எல்.பைரப்பா, ஐஐஎஸ்சி இயற்பியல் துறைப் பேராசிரியா் மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த தீபக் தா், தெலங்கானாவைச் சோ்ந்த ஆன்மிகத் தலைவா் சுவாமி சின்ன ஜீயா், பிரபல திரைப்பட பின்னணி பாடகி மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த சுமன் கல்யாண்பூா், மொழியியல் பேராசிரியரும் தில்லி ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் இணை துணைவேந்தருமான தில்லியைச் சோ்ந்த கபில் கபூா், இன்ஃபோசிஸ் நிறுவன இணை நிறுவனா் நாராணமூா்த்தியின் மனைவியும் இன்ஃபோசிஸ் அறக்கட்டளைத் தலைவருமான கா்நாடகத்தைச் சோ்ந்த சுதா மூா்த்தி, குஜராத்தில் பிறந்து தெலங்கானாவில் வசித்து வரும் ஆன்மிகத் தலைவரும், பிரபல யோகா குருவுமான கமலேஷ் டி.படேல் ஆகிய 9 பேருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்ம ஸ்ரீ: 91 பேருக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

எஸ்.எல்.பைரப்பாவுக்கு பத்ம பூஷண் விருது

பத்ம பூஷண் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எஸ்.எல்.பைரப்பா, கர்நாடக மாநிலம், ஹாசன் மாவட்டம், சென்னராயப்பட்டணா வட்டத்தில் உள்ள சந்தேசிவரா கிராமத்தில் 1931ஆம் ஆண்டு ஜூன் 20ஆம் தேதி பிறந்தவர்.
இவரது தந்தை பெயர் லிங்கன்னையா. கோரூர் ராமசாமி ஐயங்காரின் எழுத்துகளால் ஈர்க்கப்பட்டு கன்னட இலக்கியத்தில் கால் பதித்த பைரப்பா, புதின எழுத்தாளர், திரைக்கதை ஆசிரியர், தத்துவ ஆசிரியர் என்று பல பரிமாணங்களில் பங்காற்றியவர். கன்னடத்தில் இவர் எழுதிய புதினங்கள் ஆங்கிலம், ஹிந்தி, மராத்தியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 
1958இல் 'பீமகயா' என்ற நூல் மூலம் எழுத்தாளராக அறிமுகமான பைரப்பா, இதுவரை 24 புதினங்களை எழுதியிருக்கிறார். "வம்சவிருக்ஷô', "தப்பலிய நீனாதே மகனே', "மடதனா', "நாயி நெரலு' ஆகிய புதினங்கள் திரைப்படங்களாக எடுக்கப்பட்டுள்ளன. 
"வம்சவிருசஷா' புதினத்திற்கு 1966ஆம் ஆண்டு கன்னட சாஹித்ய அகாதெமி விருது கிடைத்தது. 1975ஆம் ஆண்டு "தாட்டு' புதினத்திற்கு மத்திய சாஹித்ய அகாதெமி விருது கிடைத்தது. இவருக்கு 2016ஆம் ஆண்டு மத்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ வழங்கப்பட்டது.

புதுச்சேரி மருத்துவருக்கு பத்மஸ்ரீ

புதுச்சேரியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் நளினி பார்த்தசாரதிக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர் ஜிப்மர் மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அரிதான ரத்தக் கசிவு நோய்க்கு புதுச்சேரியில் சிகிச்சை மையம் அமைத்து கடந்த 30 ஆண்டுகளாக ஏழை, எளியோருக்கு சிகிச்சை அளித்து வருகிறார். மேலும், பொதுமக்களுக்கு இந்த நோய் குறித்து முகாம்கள், கருத்தரங்குகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

 

 

Tags : Padma Awards
ADVERTISEMENT
ADVERTISEMENT