இந்தியா

மீண்டும் 43 ஆயிரத்தைத் தாண்டிய ஒரு சவரன் தங்கம்!

26th Jan 2023 12:36 PM

ADVERTISEMENT

சென்னையில் ஆபரணத் தங்கம் இன்று ரூ.280 உயர்ந்து 43 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 

தங்கம் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கம் கண்டுவருவது தொடர்ந்து நிகழ்ந்து வரும் ஒன்றாக இருந்தாலும், கடந்த இரண்டு மாதமாக தங்கத்தின் விலை ஏற்றம் கண்டு வருகிறது.

இந்நிலையில், ஜனவரி 26-ம் தேதி காலை நிலவரப்படி 43 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 

அதன்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,380ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம் சவரனுக்கு ரூ.280 அதிகரித்து ஒரு சவரன் ரூ.43,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

படிக்க: சனிப்பெயர்ச்சி யாருக்கு கைகொடுக்கும்! என்ன சொல்கிறார் ஜோதிடர்?

அதேசமயம், வெள்ளியின் விலை ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.75.00 ஆகவும், ஒரு கிலோ ரூ.1000 உயர்ந்து ரூ.75,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT