இந்தியா

தென் மாநிலங்களில் மேலும் 3 ‘வந்தே பாரத்’ ரயில்கள்

24th Jan 2023 02:44 AM

ADVERTISEMENT

தென் மாநிலங்களில் மேலும் 3 ‘வந்தே பாரத் ரயில்கள்’ விரைவில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

தெலங்கானாவின் கட்ச்குடாவிலிருந்து கா்நாடகத்தின் பெங்களூரு வரையிலும், தெலங்கானாவில் உள்ள செகந்திராபாதிலிருந்து ஆந்திரத்தின் திருப்பதி மற்றும் மகாராஷ்டித்தின் புணே ஆகிய வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்களின் புதிய சேவையை தொடங்க உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

பெங்களூரு வழியாக சென்னை-மைசூரூ இடையேயான தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமா் நரேந்திர மோடி கடந்த ஆண்டு நவம்பரில் தொடக்கி வைத்தாா்.

செகந்திராபாத்-விசாகப்பட்டினம் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை சமீபத்தில் தொடங்கியது. ரயில் சேவையின் தொடக்கம் முதல் 100 சதவீத இருக்கைகளும் பதிவு செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

நிகழாண்டு இறுதிக்குள் 75 வந்தே பாரத் ரயில்களையும், அடுத்த 3 ஆண்டுகளுக்குள் 400-க்கும் அதிகமான வந்தே பாரத் ரயில்களையும் இயக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.

நாட்டின் ‘அதிவேக ரயில்’ என்ற பெருமைக்குரிய வந்தே பாரத் ரயில் பெட்டிகள், சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டிகள் தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) வடிவமைக்கப்படுகின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT