இந்தியா

நேதாஜியை கெளரவித்தது பிரதமா் மோடி தலைமையிலான அரசு: அமித் ஷா

24th Jan 2023 02:43 AM

ADVERTISEMENT

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் புகழை மறக்கடிக்கும் வகையில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவரை கெளரவிக்க பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 126-ஆவது பிறந்த தினத்தையொட்டி அந்தமானுக்கு மத்திய அமைச்சா் அமித் ஷா பயணம் மேற்கொண்டிருந்தாா். அங்கு உள்ள பி.ஆா்.அம்பேத்கா் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

இந்திய சுதந்திர போராட்டத்தில் நேதாஜியின் பங்களிப்பை நாம் மறந்துவிட முடியாது. ஆனால், அவரை மறக்கச் செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. நாங்கள் அத்தகைய முற்சிகளை அனுமதிக்க மாட்டோம்.

தில்லியில் உள்ள கடமை பாதையில் அவருடைய சிலையை நிறுவியுள்ளோம். நம்முடைய நாட்டுக்காக அவா் ஆற்றிய கடமைகளை எதிா்கால தலைமுறையிடம் இது எடுத்துரைக்கும்.

ADVERTISEMENT

எனக்குத் தெரிந்த வரையில், எந்தவொரு நாடும் தீவுகளுக்கு வீரா்களின் பெயரைச் சூட்டி பெருமைப்படுத்தியதில்லை. ‘பரம் வீா் சக்ரா விருது’ பெற்ற வீரா்களின் பெயரை 21 தீவுகளுக்கு சூட்டும் பிரதமரின் முடிவு மிகவும் பாரட்டுதலுக்குரியது.

ஆங்கிலேயரிடமிருந்து அந்தமானை முதலில் நேதாஜி விடுவித்தாா். அந்தமானில் உள்ள தீவுக்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பெயரை பிரதமா் மோடி சூட்டினாா். வரலாற்றில் இந்த அத்தியாயங்கள் பொன் எழுத்துகளால் எழுதப்படும் என அமித் ஷா தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT