இந்தியா

காவல் துறை தலைவர்கள் மாநாடு: பிரதமர் மோடி பங்கேற்பு

21st Jan 2023 11:46 AM

ADVERTISEMENT

 

புதுதில்லியின் பூசாவில் உள்ள தேசிய வேளாண் அறிவியல் வளாகத்தில் மூன்று நாள் நடைபெறும் அகில இந்திய காவல்துறை தலைவர்கள் டிஜிபி மற்றும் ஐஜிபி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பங்கேற்கிறார்.

2023 ஜனவரி  20-22 ஆம் தேதி வரை 3 நாள் நடைபெறும் காவல்துறை தலைவர்கள் மாநாடு நேரடி மற்றும் காணொலி என இரண்டு வகைகளிலும் நடைபெறுகிறது. பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த காவல்துறை தலைவர்கள், மத்திய ஆயுதப்படைகளின் தலைவர்கள், மத்திய காவல் அமைப்புகளின் தலைவர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் இந்த மாநாட்டில் நேரடியாக பங்கேற்கின்றனர் மற்றவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து காணொலி வாயிலாக பங்கேற்கின்றன.

தில்லியில் வெள்ளிக்கிழமை தொடங்கிய மாநாட்டில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை தாங்கி பேசினார். அப்போது, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்திய ஏஜென்சிகள் தங்களது வலுவான மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதில் வெற்றி பெற்றுள்ளதாகவும், இந்தியா இன்று பாதுகாப்பாகவும், உறுதியுடனும், நல்ல நிலையில் உள்ளது அமித்ஷா கூறினார்.

ADVERTISEMENT

இந்நிலையில், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் காவல் துறை தலைவர்கள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.

2014-ஆம் ஆண்டு முதல் காவல் துறை தலைவர்கள் ஆண்டு மாநாட்டை ஊக்குவித்து வரும் பிரதமர் நரேந்தி மோடி, முந்தைய காலங்களில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றது போல் அல்லாமல் தற்போது இரண்டு நடைபெறும் அனைத்து அமர்வுகளிலும் பங்கேற்கிறார்.

இதையும் படிக்க | சமூக வலைதளங்களில் ஏமாற்றும் விளம்பரங்கள்: மத்திய அரசு எச்சரிக்கை

இன்றைய மாநாட்டில் இணையதளக் குற்றங்கள், காவல்துறையின் தொழில்நுட்பம், தீவிரவாத எதிர்ப்பில் உள்ள சவால்கள், இடதுசாரி தீவிரவாதம், திறன் மேம்பாடு, சிறைச் சீர்திருத்தங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக இந்த மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.

ஒவ்வொரு கருப்பொருளிலும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பின்பற்றும் நடைமுறைகள் இந்த மாநாட்டில் எடுத்துரைக்கப்படும். இதன் மூலம் சிறந்த நடைமுறைகள் குறித்து பிற மாநிலங்கள் கற்க இயலும்.

இந்த நடைமுறை காவல்துறை உயர் அதிகாரிகள், பிரதமரிடம் நேரடியாக உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான சிக்கல்களை எடுத்துரைக்க உதவுகிறது. அத்துடன்  காவல்துறை அதிகாரிகள் வெளிப்படையாக தங்களது பரிந்துரைகளையும் வழங்க முடிகிறது.

பிரதமரின் தொலைநோக்குப் பார்வையால் வழிநடத்தப்படும் இந்த மாநாடு, நிகழ்கால பாதுகாப்பை உறுதி  செய்வது மட்டுமல்லாமல், சிக்கல்கள் மற்றும் சவால்களை எதிர்கொள்ளும் திறன்களை வளர்த்துக் கொள்வதற்கும் காவல் துறை மற்றும் பாதுகாப்பில் எதிர்காலத்திற்கான கருப்பொருள்கள் குறித்து  ஆலோசிக்கும் வகையிலும் இந்த மாநாட்டில் விவாதங்கள் தொடங்கியுள்ளன.

பிரதமர் நரேந்திர மோடி, 2014-ஆம் ஆண்டு முதல் காவல் துறை தலைவர்கள் ஆண்டு மாநாட்டை ஊக்குவித்து வருகிறார். இந்த மாநாடு, 2014-இல் குவஹாத்தியிலும், 2015-இல் கட்ச் வளைகுடாவிலும், 2016-இல் ஹைதராபாத்திலும், 2017-இல் டெகான்பூரில் உள்ள பிஎஸ்எஃப் பயிற்சி மையத்திலும், 2018 இல் கெவாடியாவிலும் மற்றும் 2019 இல் புணே ஐஐஎஸ்இஆர்-லும், 2021-ஆம் ஆண்டு லக்னௌ காவல் துறை தலைமையகத்திலும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT