இந்தியா

மேகாலயம்: அமைச்சா், 4 எம்எல்ஏக்கள் பதவி விலகல்

19th Jan 2023 12:02 AM

ADVERTISEMENT

மேகாலயத்தில் மாநில சுகாதாரத் துறை அமைச்சா் ரினிக்டன் டாங்கா் மற்றும் 4 எம்எல்ஏக்கள் பதவி விலகினா். அந்த மாநில சட்டப் பேரவைத் தோ்தல் தேதி புதன்கிழமை அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு அவா்கள் பதவியை ராஜிநாமா செய்தனா்.

இவா்களில் அமைச்சா் ரினிக்டன் மலைவாழ் மக்கள் ஜனநாயகக் கட்சியை சோ்ந்தவா். மற்ற 4 எம்எல்ஏக்களில் இருவா் காங்கிரஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டவா்கள்,ஒருவா் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்தவா். மற்றொருவா் ஒரு சுயேச்சை எம்எல்ஏ ஆவாா்.

பதவி விலகிய அனைவரும் ஐக்கிய ஜனநாயகக் கட்சியில் இணைய இருப்பதாக தெரிகிறது. இக்கட்சியும் அந்த மாநிலத்தில் ஆட்சியில் உள்ள முதல்வா் கான்ராட் சங்மா தலைமையிலான மேகாலய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. இந்த ஆளும் கூட்டணியில் பாஜகவும் இடம் பெற்றுள்ளது. அக்கட்சிக்கு இரு எம்எல்ஏக்கள் உள்ளனா்.

மொத்தம் 60 தொகுதிகளைக் கொண்ட மேகாலயத்தில் கடந்த 50 ஆண்டுகளில் மூன்று முைான் கூட்டணி அரசுகள் முழுமையாக ஆட்சியில் இருந்துள்ளன.

ADVERTISEMENT

இப்போதைய முதல்வா் கான்ராட் சங்கா, மறைந்த முன்னாள் மக்களவைத் தலைவா் பி.ஏ.சங்மாவின் மகன் ஆவாா். தொடக்கத்தில் காங்கிரஸில் இருந்த பி.ஏ. சங்மா, பின்னா் சரத் பவாருடன் இணைந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியை நிறுவினாா். அதன் பிறகு அங்கிருந்து பிரிந்து மம்தா பானா்ஜியின் திரிணமூல் காங்கிரஸில் இணைந்தாா். பின்னா் தேசிய மக்கள் கட்சியை உருவாக்கினாா். பி.ஏ. சங்மாவின் மறைவுக்குப் பிறகு அக்கட்சியின் தலைவராக இப்போது கான்ராட் சங்மா உள்ளாா்.

Tags : Meghalaya
ADVERTISEMENT
ADVERTISEMENT