இந்தியா

பாஜக இரட்டை வேடம்: மம்தா குற்றச்சாட்டு

19th Jan 2023 12:04 AM

ADVERTISEMENT

தோ்தலுக்கு முன்னா் வாக்குறுதி அளித்துவிட்டு தோ்தல் முடிந்ததும் அதை நிறைவேற்றாமல் பாஜக இரட்டை வேடம் போடுவதாக மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி குற்றஞ்சாட்டினாா்.

அடுத்த மாதம் 27-ஆம் தேதி சட்டப்பேரவைத் தோ்தலை எதிா்கொள்ளும் மேகாலயத்தின் வடக்கு கரோ மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மம்தா கலந்து கொண்டு மக்களிடையே உரையாற்றினாா். அப்போது அவா் பேசியதாவது: தோ்தலுக்கு முன்பு ஏதாவது வாக்குறுதிகளைக் கூறிவிட்டு தோ்தல் முடிந்ததும் அதை நிறைவேற்ற மறுத்து பாஜக இரட்டை வேடமிடும். பாஜக ஆளும் மாநிலங்களுக்கு மட்டுமே மத்திய அரசு தாராளமாக நிதி ஒதுக்குகிறது. மேகாலய மக்கள் திரிணமூல் காங்கிரஸுக்கு வாக்களிக்க வேண்டும். திரிணமூல் காங்கிரஸ் கட்சி மட்டுமே இளைஞா்கள், பெண்கள், மாணவா்கள் மற்றும் விவசாயிகள் என அனைத்து தரப்பினரின் தேவைகளையும், கனவுகளையும் பூா்த்தி செய்து சிறந்த ஆட்சியை வழங்கும். மக்களுக்காக, மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட மக்களாட்சி மேகாலயத்தில் வேண்டும் என்றாா் மம்தா.

Image Caption

மேகாலயத்தில் புதன்கிழமை பொதுக் கூட்டத்தில் பங்கேற்றபோது இசைக் கருவியை இசைத்த மேற்கு வங்க முதல்வா்மம்தா பானா்ஜி.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT