ராஜஸ்தானின் சில பகுதிகளில் கடுமையான குளிர் நிலவுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
வடமாநிலங்களின் பல பகுதிகளில் வெப்பநிலை வழக்கத்தை விடக் குறைவாகப் பதிவாகியுள்ள நிலையில், ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் கடும் குளிரில் மக்கள் தத்தளித்து வருகின்றனர். இதனால், அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் இரவு வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸுக்குக் குறைவாக இருந்தது என்று வானிலைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
படிக்க: சனிப் பெயர்ச்சி பலன்கள் 2023 - மகரம்
சிகாரின் ஃபதேபூர் பகுதியில் நேற்று இரவு மைனஸ் 3.7 டிகிரி செல்சியஸாகக் குறைந்தது. சுருவில் 2.5 டிகிரியும், சிகாரில் 2 டிகிரியும், அல்வார் மற்றும் பில்வாரா 0 டிகிரி செல்சியஸ், சித்தோர்கர் 1.5 டிகிரி செல்சியஸ், தபோக் (உதைபூர்) 2 டிகிரியும், பிகானரில் 2.4 டிகிரியும், ஸ்ரீநகர் 2.4 டிகிரியும் , ஜெய்ப்பூரில் 4.7 டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளது.
மாநிலத்தில் அடுத்த இரண்டு நாள்களுக்கு கடுமையான குளிர் அலை நிலை தொடரும்.
படிக்க: சனிப் பெயர்ச்சி பலன்கள் 2023 - மீனம்
டிசம்பர் 18 மற்றும் 19 ஆம் தேதிகளில் பெரும்பாலான இடங்களில் வானிலை மேகமூட்டத்துடன் இருக்கும், அதன் பிறகு குறைந்தபட்ச வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என்பதால் கடுமையான குளிர் அலை நிலைகளில் இருந்து விடுபட வாய்ப்பு உள்ளது.