இந்தியா

பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பு

16th Jan 2023 07:03 PM

ADVERTISEMENT

தில்லியில் உள்ள என்டிஎம்சி மாநாட்டு மையத்தில் நடைபெறும் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) இரண்டு நாள் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை கலந்து கொண்டார்.

பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்களும் இந்த முக்கிய கூட்டத்தில் பங்கேற்றனர்.

தேசிய செயற்குழு கூட்டத்தின் மூன்று தீர்மானங்களும் அரசியல், பொருளாதாரம் மற்றும் சர்வதேச விவகாரங்களை உள்ளடக்கியதாக இருக்கும் என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு நடைபெற உள்ள 9 மாநில சட்டப்பேரவை தேர்தல் மற்றும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடளுமன்ற தேர்தலுக்கான வியூகம் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: ரிமோட் வாக்குப்பதிவு: தலைமைத் தேர்தல் ஆணையம் ஆலோசனை

ADVERTISEMENT

முக்கிய தலைவர்களிடம் தேர்தலுக்காக பெரிய பொறுப்புகளும் ஒப்படைக்கப்படலாம் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT