இந்தியா

கேரள - ஜார்கண்ட் முதல்வர்கள் சந்திப்பு!

16th Jan 2023 09:29 PM

ADVERTISEMENT

திருவனந்தபுரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் திங்கள்கிழமை நேரில் சந்தித்து பேசினர்.

ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தனது குடும்பத்துடன் கேரள மாநிலத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார்.

இந்நிலையில், திருவனந்தபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் கேரள முதல்வர் பினராயி விஜயனை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து ஹேமந்த் சோரன் பேசினார்.

இதுகுறித்து முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்ட செய்தியில்,

ADVERTISEMENT

சுற்றுலா வளர்ச்சிக்கான முழு ஒத்துழைப்பு வழங்குவதாக ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார். குடும்பத்துடன் சுற்றுலா வருவதற்கு கேரளாவை தேர்ந்தெடுத்த ஹேமந்த் சோரனுக்கு நன்றி தெரிவிப்பதோடு, அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இங்கு சிறந்த நேரம் அமைய வாழ்த்துக்கள் எனப் பதிவிட்டுள்ளார்.

மேலும், கேரள சுற்றுலாத்துறை குறித்து ஹேமந்த சோரனுக்கு சுற்றுலாத்துறை செயலாளர் விளக்கம் அளித்தார். இந்த சந்திப்பின்போது சுற்றுலாத் துறை அமைச்சர் முகமது ரியாஸ் மற்றும் தலைமைச் செயலாளர் வி.பி.ஜாய் உடனிருந்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT