இந்தியா

அசாமில் பக்தர்கள் சென்ற வாகனம் விபத்து: 3 பேர் பலி, 14 பேர் காயம்!

16th Jan 2023 11:31 AM

ADVERTISEMENT

 

அசாமின் மோரிகான் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை-37 இல் பக்தர்கள் சென்ற வாகனத்தின் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. 

ஞாயிற்றுக்கிழமை மகர சங்கராந்தியை முன்னிட்டு லோஹித் நதியில் புனித நீராடிய 17 பக்தர்கள் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள பர்சுராம் குண்டாவில் இருந்து குவஹாத்திக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது தரம்துல் பகுதியில் பக்தர்கள் வந்த வாகனமும், லாரியும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 14 பேர் படுகாயமடைந்தனர்.

ADVERTISEMENT

காயமடைந்தவர்கள் மோரிகான் சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

இறந்தவர்களில் ஒருவர் பூபால் ஆதிகாரி என அடையாளம் காணப்பட்டுள்ளார், மற்றவரின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை.

மேலும், விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT