இந்தியா

இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவு மொத்த விலை பணவீக்கம் சரிவு!

16th Jan 2023 03:23 PM

ADVERTISEMENT

கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு டிசம்பர் மாதத்தில் மொத்த விலை பணவீக்கமானது 4.95 சதவிகிதமாக குறைந்துள்ளது.

பணவீக்கத்தை கட்டுப்படுத்த கடந்த ஓராண்டாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த நிலையில், டிசம்பர் மாதம் 5 சதவிகிதத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

இதுகுறித்து மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையில்,

கடந்த நவம்பர் மாதத்தில் 5.85 சதவிகிதமாக இருந்த மொத்த விலை பணவீக்கமானது டிசம்பரில் 4.95 சதவிகிதமாக குறைந்துள்ளது. கடந்த 2021 டிசம்பரில் மொத்த விலை பணவீக்கம் 14.27 சதவிகிதாக இருந்தது.

ADVERTISEMENT

உணவு பொருள்கள், கனிம எண்ணெய், கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, ஜவுளி, ரசாயனம் மற்றும் ரசாயன பொருள்கள் ஆகியவற்றின் விலை குறைந்ததே மொத்த விலை பணவீக்கம் கணிசமாக குறைந்ததற்கு முக்கிய காரணமாக உள்ளது எனத் தெரிவித்துக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 2021-ல் 4.95 சதவிகிதமாக இருந்த மொத்த விலை பணவீக்கமானது இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு 5 சதவிதத்திற்கு கீழ் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT