இந்தியா

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 2,000: கர்நாடகத்தில் பிரியங்கா வாக்குறுதி!

16th Jan 2023 03:59 PM

ADVERTISEMENT

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மாதம்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.2,000 வழங்கப்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அறிவித்துள்ளார்.

கர்நாடகத்தில் இந்தாண்டு மே மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள பாஜகவும், மீண்டும் ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆட்சிக்கு வந்தால் மாதம்தோறும் 200 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று முதல் வாக்குறுதியை காங்கிரஸ் அறிவித்திருந்தது.

இந்நிலையில், பெங்களூருவில் இன்று பொதுக்கூட்டத்தில் பேரிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, இரண்டாவது வாக்குறுதியாக மாதம்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.2,000 வழங்கப்படும் என்று அறிவித்தார்.

ADVERTISEMENT

இதையும் படிக்க | இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவு மொத்த விலை பணவீக்கம் சரிவு!

பொதுகூட்டத்தில் பேசிய பிரியங்கா, “நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன், பாஜக ஆட்சியில், உங்கள் வாழ்க்கை சிறப்பாக இருந்ததா? உங்கள் வாழ்க்கையில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டதா? வாக்களிக்கும் முன் கடந்த சில ஆண்டுகளைப் பார்த்து உங்கள் வாழ்க்கையை மதிப்பீடு செய்யுங்கள்.

கர்நாடகத்தின் சூழல் மிகவும் மோசமடைந்துள்ளது. ஊழலால் ரூ. 1.5 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. காவலர்கள் தேர்வில் நடைபெற்ற முறைகேடு உண்மையில் வெட்கக்கேடானாது. நீங்கள் உங்கள் குழந்தைகளை கற்பிக்கிறீர்கள். ஆனால், ஆட்சியில் இருக்கும் அரசியல்வாதிகளிடம் இருந்து நீங்கள் பெறுவது இதுதான்.” எனத் தெரிவித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT