இந்தியா

வழிபாட்டுத் தலங்களை சுற்றுலா இடங்களாக மாற்றுவதா? பாஜகவுக்கு எதிர்ப்பு!

12th Jan 2023 04:15 PM

ADVERTISEMENT

 

வழிபாட்டுத் தலங்களை சுற்றுலா இடங்களாக மாற்றி வருவாய் ஈட்ட பாஜக அரசு முயற்சிப்பதாக சமாஜவாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார். 

வாராணசி கங்கை ஆற்றில் பயணிக்கும் உலகின் மிகப்பெரிய சொகுசுப் படகான எம்வி கங்கா விலாஸை பிரதமர் நரேந்திர மோடி நாளை காணொலி வாயிலாக தொடக்கி வைக்கவுள்ளார். 

இது தொடர்பாக பேசிய மாஜவாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், வழிபாட்டு தலங்களை சுற்றுலாவுக்கு ஏற்ற இடங்களாக மாற்றி அதன் மூலம் வருவாய் ஈட்டுவதே பிரதமர் நரேந்திர மோடியின் ஒரே குறிக்கோளாக உள்ளது.  

ADVERTISEMENT

வாராணசியில் சுற்றுலா தலங்களுக்கும் சொகுசு படகுகளுக்கும் செய்யும் செலவை கங்கை நதியை சுத்தம் செய்வதற்கு பயன்படுத்தலாம். வாழ்வின் கடைசிகட்டத்திலிருக்கும் மக்கள் ஆன்மிக ரீதியாக காசிக்கு வருகை புரிகின்றனர். 

படிக்க51 நாள்கள்.. 27 ஆறுகள்.. உலகின் மிகப்பெரிய சொகுசுப் படகு பற்றிய ஆச்சரிய தகவல்கள்

ஆனால், கங்கை கரைபுரளும் வாராணசியை சுற்றுலா இடமாக மோடி அரசு மாற்றுகிறது. கங்கை ஆற்றில் பயணிப்பதற்காக உலகின் மிகப்பெரிய சொகுசுப் படகையும் மோடி தொடக்கி வைக்கிறார். இதன்மூலம் கங்கை ஆற்றில் சிறிய படகுகளை ஓட்டுபவர்கள் பாதிக்கப்படுவார்கள்.’

வாராணசி ஆற்றை சுற்றுலா தலமாக மாற்றுவதால் தொழிலதிபர்களும், மற்ற பெரு வணிகர்களும்தான் பயனடைவார்கள் எனக் குறிப்பிட்டார்.

எம்வி கங்கா விலாஸ்

எம்வி கங்கா விலாஸ் என்ற சொகுசுப் படகு, வாராணயிலிருந்து தனது பயணத்தைத் தொடங்கி, சுமார் 51 நாள்கள் 3,200 கிலோ மீட்டர் தொலைவுக்குப் பயணித்து வங்கதேசம் வழியாக அசாம் மாநிலத்தின் திப்ருகர் பகுதியை அடையவிருக்கிறது. 

மூன்று தளங்களைக் கொண்ட இந்த சொகுசுப் படகு 18 சொகுசு அறைகளுடன், 36 விருந்தினர்கள் பயணிக்கும் வகையில் அனைத்து அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சொகுசுப் படகின் ஒட்டுமொத்த பயணத்திலும் பங்கேற்க 32 சுவிட்சர்லாந்து பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT