இந்தியா

புணே விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: அதிகாரிகள் சோதனை

12th Jan 2023 08:20 PM

ADVERTISEMENT

தில்லியிலிருந்து புணே செல்லும் விமானத்திற்கு மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். 

இதுதொடர்பாக தில்லி காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 

 “தில்லி விமான நிலையத்திலிருந்து புணே செல்லும் ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மர்மநபர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து மத்திய தொழில்பாதுகாப்புப் படை மற்றும் தில்லி காவல்துறையினர் விமானத்தை சோதனையிட்டனர். 

அதில் மிரட்டல் விடுக்கப்பட்டதைப் போன்று வெடிபொருள்கள் எதுவும் கண்டறியப்படவில்லை. எனினும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக பரவிய செய்தியால் விமானநிலையம் பரபரப்பாகக் காணப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT