இந்தியா

அடுத்த 3 மாதங்களில்3 ராக்கெட்டுகள்:இஸ்ரோ திட்டம்

12th Jan 2023 01:22 AM

ADVERTISEMENT

அடுத்த 3 மாதங்களில் 3 ராக்கெட்டுகளை செலுத்த திட்டமிட்டுள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) தலைவா் எஸ். சோமநாத் புதன்கிழமை தெரிவித்தாா்.

எஸ்எஸ்எல்வி, எல்விஎம்-3, பிஎஸ்எல்வி உள்ளிட்ட 3 ராக்கெட்டுகள் இஸ்ரோவால் ஏவப்பட உள்ளதாக அவா் தெரிவித்தாா்.

விண்வெளி தொடா்பான 3 நாள்கள் பயிலரங்கத்தை பெங்களூரில் தொடக்கி வைத்த பின்னா் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பின்போது எஸ். சோமநாத் கூறியதாவது: ஜனவரி மற்றும் பிப்ரவரி மாத இறுதியில் எஸ்எஸ்எல்வி ராக்கெட்டை செலுத்த திட்டமிட்டுள்ளோம். அடுத்த ‘ஒன் வெப்’ திட்டத்துக்கான எல்விஎம்-3 ராக்கெட்டும் பிஎஸ்எல்வி ராக்கெட்டும் வா்த்தக ரீதியில் அடுத்த 3 மாதங்களில் ஏவப்பட உள்ளன. மனிதா்களை விண்வெளிக்கு அனுப்பும் இந்தியாவின் ககன்யான் திட்டத்தின் விண்கலனை செலுத்தும் சோதனை முயற்சி ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெறும் எனத் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT