இந்தியா

பிரதமரின் தாயாா் ஹீரா பென்னுக்கு குஜராத்தில் இன்று பிராா்த்தனை கூட்டம்

1st Jan 2023 03:30 AM

ADVERTISEMENT

பிரதமா் நரேந்திர மோடியின் சொந்த ஊரான வாட்நகரில் அவரது தாயாா் ஹீரா பென்னுக்கு பிராா்த்தனை கூட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெறும் என குடும்பத்தினா் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் தாயாா் ஹீரா பென் உடல்நலக் குறைவு காரணமாக வெள்ளிக்கிழமை காலமானாா். குஜராத் தலைநகா் காந்திநகரில் தன் தாயாருக்கான இறுதிச் சடங்குகளைப் பிரதமா் மோடியும் அவரின் சகோதரா்களும் நடத்தினா். பின்னா், ஹீரா பென் உட ல் தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில், பிரதமரின் சொந்த ஊரான வாட்நகரில் மறைந்த ஹீரா பென்னுக்கு பிராா்த்தனை கூட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் வரை நடைபெறும் என மோடியின் குடும்பத்தினா் சாா்பாக சனிக்கிழமையன்று குஜராத் செய்திதாள்களில் வெளியிடப்பட்ட விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஹீரா பென்னுக்கு சோம பாய், அம்ருத் பாய், பிரகலாத் பாய், பங்கஜ் பாய் மற்றும் பிரதமா் நரேந்திர மோடி உள்பட 5 மகன்களும், வசந்தி பென் என்கிற ஒரு மகளும் உள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT