இந்தியா

ராஜஸ்தான் நகரங்களில் 10 டிகிரிக்கும் குறைவாக வெப்பநிலை பதிவு, கடும் குளிரால் மக்கள் அவதி

1st Jan 2023 01:26 PM

ADVERTISEMENT

ராஜஸ்தானில் அனைத்து முக்கிய நகரங்களிலும் 10 டிகிரி செல்சியஸுக்கும் குறைவாக வெப்பநிலை பதிவாகியுள்ளதால் மாநிலத்தில் பல பகுதிகளிலும் கடும் குளிர் நிலவுவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

ராஜஸ்தானின் பதேபூரில் நேற்று (டிசம்பர் 31) 1 டிகிரி செல்சியஸ் என்ற அளவுக்கு வெப்பநிலை குறைந்து கடும் குளிர் நிலவியது. பதேபூரைத் தொடர்ந்து சுருவில் 1.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. ஹனுமான்கார்க் மற்றும் சித்தோகார்க்கில் 3.3 டிகிரி செல்சியஸும், சிகாரில் 3.5 டிகிரி செல்சியஸும். பில்வாராவில் 4 டிகிரி செல்சியஸும், ஆல்வார் மற்றும் பிலானியில் 4.8 டிகிரி செல்சியஸும் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

இதையும் படிக்க: யூடியூப் டிரெண்டிங்கில் ‘துணிவு’ முதலிடம்! 

ராஜஸ்தானின் மற்ற இடங்களில் 6.5 டிகிரி செல்சியஸில் இருந்து 10 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகியுள்ளது. சில இடங்களில் கடுமையான குளிர் காற்றும் வீசி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கடும் குளிரால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT