இந்தியா

தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ராஜிநாமா!

DIN

தில்லி துணை முதல்வர் பதவியை மணீஷ் சிசோடியா ராஜிநாமா செய்துள்ளார். 

சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, துணை முதல்வர் பதவியிலிருந்து மணீஷ் சிசோடியா விலகியுள்ளார்.

மேலும், தில்லி சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த சத்யேந்திர ஜெயினும் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். இருவரின் ராஜிநாமா கடிதத்தையும் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ஏற்றுக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தில்லி கலால் கொள்கையை உருவாக்கி அமல்படுத்தியதில் ஊழல் நடைபெற்றதாக தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது புகார் எழுந்தது. 

இதனைத் தொடர்ந்து மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) ஞாயிற்றுக்கிழமை அவரை கைது செய்தது. 

இதன் தொடர்ச்சியாக மணீஷ் சிசோடியா, திங்கள்கிழமை தில்லி சிபிஐ ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு 5 நாள் சிபிஐ காவல் அளிக்கப்பட்டுள்ளது. 

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மணீஷ் சிசோடியா தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என்றும், தில்லி உயர்நீதிமன்றத்தை நாடவும் உத்தரவிட்டது. 

இந்நிலையில், தில்லி துணை முதல்வர் பதவியை மணீஷ் சிசோடியா ராஜிநாமா செய்துள்ளார். அவரைத் தொடர்ந்து சுகாதாரத் துறை அமைச்சர் சத்தியேந்திர ஜெயினும் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். இருவரின் ராஜிநாமா கடிதங்களையும் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் பெண் தற்கொலை

தக் லைஃப் படப்பிடிப்பில் சிம்பு!

நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் வெண்ணைத்தாழி விழா!

நாட்டரசன்கோட்டையில் பெருமாள் ஆற்றில் இறங்கும் நிகழ்வு!

மறுவெளியீட்டிலும் பிளாக்பஸ்டர்!

SCROLL FOR NEXT