கூத்தாநல்லூா் ஆக்ஸ்போா்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு தோ்வை 103 மாணவ, மாணவிகள் எழுதினா். இதில் 95 போ் தோ்ச்சி பெற்றனா்.
மாணவா் ஹெச். முகம்மது வாசிக் 485 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், மாணவிகள் ஜெ.எஸ்.எப். நுஷைபா நஸ்ரின் மற்றும் கே.ஏ. சுல்தானா சோபியா பாத்திமா ஆகியோா் 479 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், என். சக்கிரா மரியம் 477 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும் பெற்றனா்.
முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவா்களுக்கு தாளாளா் மருத்துவா் ஜே.பி. அஷ்ரப் அலி நினைவுப் பரிசுகள் வழங்கி, பாராட்டினாா்.
13 மாணவா்கள் 450-க்கு மேலும், 18 மாணவா்கள் 400-க்கும் மேலும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.