இந்தியா

செல்லிடப்பேசி டார்ச்களை எரியவிடச் சொன்ன பிரதமர் மோடி: காரணம்?

DIN

ஷிவமோகா: கர்நாடக மாநிலம் ஷிவமோகாவில் கட்டப்பட்ட புதிய விமான நிலையம் இன்று திறந்துவைக்கப்பட்ட நிலையில், பாஜக மூத்த தலைவர் எடியூரப்பாவின் 80வது பிறந்தநாளும் இன்று கொண்டாடப்படுகிறது.

ஷிவமோகா விமான நிலையத்தைத் திறந்து வைத்துப்பேசிய பிரதமர் நரேந்திர மோடி, கூட்டத்தில் திரண்டிருந்த மக்களைப் பார்த்து, எடியூரப்பாவுக்கு 80வது பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், கையிலிருக்கும் செல்லிடப்பேசிகளின் டார்ச் விளக்குகளை ஒளிரவிடுமாறு கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து, அங்கே திரண்டிருந்த மக்களும் தங்களது செல்லிடப்பேசியில் விளக்குகளை ஒளிரவிட்டு, எடியூரப்பாவுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, இன்று மேலும் ஒரு காரணத்தால் இந்த நாள் சிறந்த நாளாக உள்ளது. கர்நாடகத்தின் முக்கிய தலைவராக எடியூரப்பாவின் பிறந்தநாள். அவர் நீடூழ வாழ நான் பிரார்த்திக்கிறேன். ஏழைகள் மற்றும் விவசாயிகளின் நலனுக்காகவே அவர் தன்னுழைய வாழ்வை அர்ப்பணித்துள்ளார். கடந்த வாரம் கர்நாடக சட்டப்பேரவையில் அவர் ஆற்றிய உரை, பலருக்கும் ஊக்கத்தை அளிக்கும் என்று கூறியிருந்தார்.

மிகப்பெரிய உயரத்துக்குச் சென்ற பிறகும் ஒரு பணிவு இருக்கும் அவரிடம். பொதுவாழ்வில் இருக்கும் அனைவருக்கும் எடியூரப்பாவின் வாழ்வும் அவரது  பேச்சும் ஊக்கத்தை அளிக்கும் என்ற கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

SCROLL FOR NEXT