இந்தியா

பிற்பகல் 1 மணி நிலவரப்படி மேகாலயத்தில் 44.73%, நாகாலாந்தில் 57.06% வாக்குகள் பதிவு 

27th Feb 2023 02:04 PM

ADVERTISEMENT

வடகிழக்கு மாநிலங்களான மேகாலயத்தில் 44.73 சதவீதமும், நாகாலாந்தில் 57.06 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன. 

இரு மாநிலங்களில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தேர்தலையொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

60 தொகுதிகளைக் கொண்ட மேகாலயத்தில், சோஹியாங் தொகுதியில் ஒரு வேட்பாளா் மரணமடைந்ததால், 59 தொகுதிகளுக்கு தோ்தல் நடைபெறுகிறது. 

இதேபோல் 60 தொகுதிகளைக் கொண்ட நாகாலாந்தில், அகுலுடோ தொகுதியில் பாஜக வேட்பாளா் போட்டியின்றி வெற்றி பெற்றுவிட்ட நிலையில், 59 தொகுதிகளில் திங்கள்கிழமை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

ADVERTISEMENT

இதையும் படிக்க- ஈரோடு கிழக்கில் திமுக - அதிமுகவினா் இடையே தள்ளுமுள்ளு

மாலை 4 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைகிறது. இரு மாநிலங்களிலும் பாஜகவுக்கு ஆதரவாக, பிரதமா் மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா உள்ளிட்ட தலைவா்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

காங்கிரஸ் தரப்பில் மேகாலயத்தில் ராகுல் காந்தியும், நாகாலாந்தில் கட்சியின் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேவும் பிரசாரம் மேற்கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT