இந்தியா

ரஷியப் படை வெளியேறக் கோரி ஐ.நா. தீர்மானம்: இந்தியா வாக்களிக்கவில்லை

DIN

உக்ரைன் நாட்டில் இருந்து ரஷியப் படைகள் வெளியேறக் கோரி ஐ.நா. கொண்டு வந்த தீர்மானத்திற்கு இந்தியா உள்பட 32 நாடுகள் வாக்களிக்கவில்லை.

உக்ரைன் - ரஷியா போர் தொடங்கி நிறைவு பெற்றதை தொடர்ந்து, உக்ரைனிலிருந்து உடனடியாக ரஷிய ராணுவம் வெளியேறக் கோரியும், போரை நிறுத்தக் கோரியும் ஐ.நா.வில் இன்று சிறப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.  

இந்த தீர்மானத்திற்கு 141 நாடுகள் ஆதரவளித்தும், 7 நாடுகள் எதிர்த்தும் வாக்களித்த நிலையில், இந்தியா, சீனா, பாகிஸ்தான் உள்பட 32 நாடுகள் வாக்களிக்காமல் புறக்கணித்தனர்.

இந்த தீர்மானம் குறித்தி ஐ.நா.வுக்கான இந்திய தூதர் கூறியதாவது:

“உக்ரைன் நிலைமையை எண்ணி இந்தியா தொடர்ந்து கவலை கொண்டுள்ளது. இந்த போரால் எண்ணற்ற உயிர்கள் இழந்ததற்கும், லட்சக்கணக்கானோர் வீடற்றவர்களாக மாறுவதற்கும் வழிவகுத்துள்ளது. பொதுமக்களின் உள்கட்டமைப்புன் மீதான தாக்குதல்கள் ஆழ்ந்த கவலைக்குரியவை ஆகும்.

ஐ.நா.வின் கொள்கையை இந்தியா நிலைநிறுத்துகிறது. பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண்பதே ஒரே வழி என்பதை நாங்கள் எப்போதும் வலியுறுத்துவோம். இன்றைய தீர்மானத்தின் குறிப்பிட்ட நோக்கங்களை கவனத்தில் கொள்ளும்போது, நாங்கள் விலகியிருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

ரஷியா - உக்ரைன் போர்

ரஷியாவுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பில், தங்களின் நெருங்கிய அண்டை நாடான உக்ரைன் இணைவது தங்களது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷியா எதிர்ப்பு தெரிவித்தது.

எனினும், நேட்டோவில் இணைவதற்கு வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தலைமையிலான தற்போதைய உக்ரைன் அரசு விருப்பம் தெரிவித்தது.

அதையடுத்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்து, கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனின் லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், கொ்சான், ஸபோரிஷியா ஆகிய பிரதேசங்களைக் கைப்பற்றியது.

மேலும், அந்தப் பிரதேசங்களின் கணிசமான பகுதிகள் இன்னும் உக்ரைன் படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையிலேயே, அவற்றை தங்களுடன் இணைத்துக் கொள்வதாக ரஷியா அறிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு!

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள்: பிரேமலதா நம்பிக்கை

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

SCROLL FOR NEXT