இந்தியா

சட்டவிரோத பணப்பரிமாற்றம்: சுகேஷின் காவல் மேலும் நீட்டிப்பு!

DIN

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு தொடா்பாக இடைத்தரகா் சுகேஷ் சந்திரசேகரின் காவலை மேலும் மூன்று நாள்களுக்கு நீட்டித்து தில்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ரெலிகோ் புரொமோட்டா் நிறுவனத்தின் மால்விந்தா் சிங்கின் மனைவியிடம், சுகேஷ் சந்திரசேகா் மற்றும் அவரது கூட்டாளிகள் மத்திய உள்துறை மற்றும் சட்டத் துறையின் செயலாளர்கள் என ஏமாற்றி, ரூ.4 கோடியை மோசடி செய்து பெற்றது தொடா்பாக தில்லி போலீஸின் சிறப்புப் பிரிவில் கடந்த 2021 செப்டம்பரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், தில்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகரை இந்த வழக்குத் தொடா்பாக அமலாக்கத் துறையினா் கைது செய்தனர். இதையடுத்து, சுகேஷை 9 நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், 9 நாள்கள் முடிவடைந்த நிலையில், தீபக் ராம்தானி மற்றும் பிற சிறை அதிகாரிகளுக்கு செலுத்தப்பட்ட பணம் குறித்த விவரங்களைச் சேகரிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறையினர் நீதிமன்றத்தில் கூறியதையடுத்து, சுகேஷின் காவல் மீண்டும் மூன்று நாள்களுக்கு நீடித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இந்த வழக்கு சுகேஷ் மீது பதிவு செய்யப்பட்டுள்ள 3-ஆவது வழக்காகும். இதற்கு முன்பாக, சிறையிலுள்ள மால்விந்தா் சிங்கின் சகோதரர் ஷிவிந்தா் சிங்கை விடுதலை செய்ய உதவுவதாகக் கூறி அவருடைய மனைவியை ஏமாற்றி மோசடி செய்து ரூ.200 கோடி பெற்ற்காகவும், அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை வி.கே.சசிகலா பிரிவினருக்கு பெற்றுத் தர தோ்தல் ஆணையத்தின் அதிகாரிகளுக்கு லஞ்சம் அளிக்க முயன்றது தொடர்பாகவும் 2 சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்குகள் சுகேஷ் சந்திரசேகா் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை வாபஸ்!

தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் டீப் ஃபேக் தொழில்நுட்பம்?

‘ஹீரமண்டி’ இணையத் தொடரின் சிறப்புக் காட்சியில் பாலிவுட் பிரலபங்கள்!

பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி

காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான்!

SCROLL FOR NEXT