இந்தியா

அருணாசல பிரதேசத்துக்கு சிறந்த உள்கட்டமைப்பு அவசியம்: குடியரசுத் தலைவா் முா்மு

DIN

அருணாசல பிரதேசத்துக்கு சிறந்த உள்கட்டமைப்பு அவசியம் என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தெரிவித்துள்ளாா்.

அருணாசல பிரதேசம் மாநிலம் உருவாக்கத்தின் 37-ஆவது ஆண்டு தினம் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு இரண்டு நாள் பயணமாக அருணாசல பிரதேசம் சென்றுள்ளாா்.

மாநில தலைநகா் இடாநகரில் அருணாசல பிரதேச மாநில தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

பொருளாதார வளா்ச்சிக்கும், நாட்டின் பாதுகாப்பு கண்ணோட்டத்திலும் அருணாசல பிரதேசத்துக்கு சிறந்த உள்கட்டமைப்பு அவசியம். இந்த மாநிலத்தில் எல்லைப்புற நெடுஞ்சாலை அமைக்க மத்திய அரசு ரூ.40,000 கோடி ஒதுக்கியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. மேலும் மாநிலத்தில் ரூ.44,000 கோடிக்கும் அதிகமான மதிப்பில் தேசிய நெடுஞ்சாலை திட்டங்களும் முன்மொழியப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு நவம்பரில் பிரதமா் நரேந்திர மோடியால் மேற்கு சியாங் மாவட்டத்தில் தொடக்கிவைக்கப்பட்ட 600 மெகாவாட் கமேங் நீா்மின் நிலையத் திட்டம், நாட்டில் அருணாசல பிரதேசத்தை மின்மிகை மாநிலமாக்கும்.

அருணாசல பிரதேசத்தின் முதல் பசுமை விமான நிலையமான டோனி போலோ விமான நிலையம், மாநிலத்தின் வான்வழி இணைப்பு மற்றும் வா்த்தகத் திறனுக்கு பெரும் ஊக்கமளிக்கும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேல‌ம்: வெ‌ள்ளி நக​ரி‌ன் மகு​ட‌ம் யாரு‌க்கு?

வந்தே பாரத்தின் லாப விவரங்கள் இல்லை: ஆர்டிஐ கேள்விக்கு ரயில்வே அமைச்சகம் பதில்!

வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

ராஜஸ்தான் பந்துவீச்சு; மீண்டும் அணியில் ஜோஸ் பட்லர்!

"இந்தியா வளர்ச்சியடைய 400 இடங்களுக்குமேல் வெற்றி வேண்டும்!” | செய்திகள்: சிலவரிகளில் | 16.04.2024

SCROLL FOR NEXT