இந்தியா

தமிழகம் உள்பட 11 மாநிலங்களில் வருமான வரித்துறை சோதனை!

21st Feb 2023 10:49 AM

ADVERTISEMENT

தமிழகம் உள்பட 11 மாநிலங்களில் 64 இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்தியாவை மையமாக கொண்டு இயங்கி வரும் பன்னாட்டு நிறுவனத்தில் இந்த சோதனையானது நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

உத்தரப் பிரதேசம், தில்லி, குஜராத், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், ஜம்மு - காஷ்மீர், ஹரியாணா, தமிழகம், உத்தரகாண்ட் மற்றும் ஹிமாசலப் பிரதேசத்தில் உள்ள 64 அலுவலகங்களில் சோதனை நடைபெறுகிறது.

இந்த சோதனையில் நூற்றுக்கணக்கான வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் ஈடுபட்டுள்ளனர்.

ADVERTISEMENT

Tags : Income Tax
ADVERTISEMENT
ADVERTISEMENT