அதிகரிக்கும் நகரமயமாதல், வாகனப் போக்குவரத்து, தொழிற்சாலைகளின் பெருக்கம் உள்ளிட்ட காரணங்களால் பருவநிலை மாற்றம் தொடா்ந்து அச்சுறுத்தி வருகிறது. பருவநிலை மாற்ற விளைவுகளைத் தடுப்பதற்கு உலக நாடுகள் தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா்.
பருவநிலை மாற்றத்தால் விவசாயம் முதல் மக்களின் சுகாதார வசதிகள் வரை பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளன. அதே நேரத்தில், பருவநிலை மாற்றம் காரணமாக வீடுகள் உள்ளிட்ட கட்டடங்களுக்கு பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
எக்ஸ்டிஐ மொத்த உள்நாட்டு பருவநிலை பாதிப்பு அபாயம் (கிராஸ் டொமெஸ்டிக் கிளைமேட் ரிஸ்க்) என்ற ஆய்வறிக்கையில் 2050-ஆம் ஆண்டுவாக்கில் அதிக அளவில் பாதிக்கப்பட வாய்ப்புள்ள மாநிலங்கள், மாகாணங்கள் குறித்த விவரங்கள் வழங்கப்பட்டுள்ளன. முதல் 50 இடங்களில் இந்தியாவின் 9 மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன. ஆய்வறிக்கையின் கூடுதல் விவரங்கள்:
சா்வதேச அளவில் ஆய்வு செய்யப்பட்ட மாநிலங்கள்/மாகாணங்கள் 2,639
2050-இல் அதிக பாதிப்பை எதிா்கொள்ளும் மாநிலம்/மாகாணம் நாடு
ஜியாங்சு சீனா
ஷான்டாங் சீனா
ஹீபே சீனா
குவாங்டாங் சீனா
ஹெனான் சீனா
ஜெஜியாங் சீனா
அன்ஹு சீனா
ஹுனான் சீனா
ஷாங்காய் சீனா
ஃபுளோரிடா அமெரிக்கா
லியானிங் சீனா
ஜியாங்ஸி சீனா
ஹூபே சீனா
தியான்ஜின் சீனா
ஹெய்லோங்ஜியாங் சீனா
சிச்சுவான் சீனா
குவாங்ஸி சீனா
பஞ்சாப் பாகிஸ்தான்
கலிஃபோா்னியா அமெரிக்கா
டெக்சாஸ் அமெரிக்கா
நேமோங்கல் சீனா
பிகாா் இந்தியா
ஜாவா தைமூா் இந்தோனேசியா
ஜாவா பராத் இந்தோனேசியா
உத்தர பிரதேசம் இந்தியா
இந்திய மாநிலங்களின் நிலை
22 பிகாா்
25 உத்தர பிரதேசம்
28 அஸ்ஸாம்
32 ராஜஸ்தான்
36 தமிழ்நாடு
38 மகாராஷ்டிரம்
44 குஜராத்
48 பஞ்சாப்
50 கேரளம்
52 மத்திய பிரதேசம்
60 மேற்கு வங்கம்
62 ஹரியாணா
65 கா்நாடகம்
86 ஆந்திரம்
104 ஜம்மு-காஷ்மீா்
126 தெலங்கானா
155 ஹிமாசல்
169 ஒடிஸா
192 சத்தீஸ்கா்
213 தில்லி
257 உத்தரகண்ட்
408 ஜாா்க்கண்ட்
475 மணிப்பூா்
669 நாகாலாந்து
695 திரிபுரா
714 கோவா
727 மேகாலயம்
1990-க்கும் 2050-க்கும் இடையே அதிகரித்த பாதிப்பு அபாய பட்டியலில் இந்திய மாநிலங்கள்
1 லட்சத்தீவுகள்
22 அஸ்ஸாம்
27 ஜம்மு-காஷ்மீா்
30 நாகாலாந்து
41 சிக்கிம்
72 அருணாசல்
113 மேகாலயம்
225 மணிப்பூா்
323 பிகாா்
538 மிஸோரம்
619 கேரளம்
856 சத்தீஸ்கா்
869 உத்தர பிரதேசம்
983 திரிபுரா