இந்தியா

அதானி குழுமத்துக்கு எதிரான அறிக்கை தொடர்பான மனு விசாரணைக்கு ஏற்பு: உச்ச நீதிமன்றம்

DIN

புது தில்லி: அதானி குழுமத்துக்கு எதிராக ஹிண்டென்பர்க் நிறுவனம் அளித்த ஆய்வறிக்கை தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை செய்ய வேண்டும் என்று கோரிய மனுவை வெள்ளிக்கிழமை விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மனுவை தாக்கல் செய்த வழக்குரைஞர் விஷால் திவாரி, இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திர சூட் தலைமையிலான அமர்வு முன்பு வியாழக்கிழமை கோரிக்கை வைத்தார்.

இது தொடர்பான தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு மனு பிப்ரவரி 10ஆம் தேதி விசாரணைக்கு வரவிருப்பதாகத் தெரிவித்தார். எனவே, இந்த மனுவும் அத்துடன் சேர்ந்து வெள்ளிக்கிழமையே விசாரிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். இதனை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஏற்றுக் கொண்டார்.

பங்குகளின் விலையை உயா்த்திக் காட்டுவதற்காக அதானி குழுமம் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அமெரிக்காவைச் சோ்ந்த ஹிண்டன்பா்க் ஆய்வு நிறுவனம் குற்றஞ்சாட்டியது. அதன் காரணமாக பங்குச் சந்தைகளில் அதானி குழுமத்தைச் சோ்ந்த நிறுவனங்களின் பங்குகள் பெருமளவில் சரிந்தன. இதனிடையே, அதானி குழுத்தின் கீழ் செயல்படும் நிறுவனங்களில் எல்ஐசி, எஸ்பிஐ உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்கள் அதிக அளவில் முதலீடுகளைச் செய்துள்ள நிலையில், அதன் முதலீட்டாளா்களிடையே பெரும் கவலை ஏற்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

SCROLL FOR NEXT