இந்தியா

மேகாலயா: அதிரடி வாக்குறுதிகளுடன் வெளியானது காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

PTI

ஷில்லாங்: மேகாலயத்தில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிடு காங்கிரஸ் கட்சி சாரபில் இன்று தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.

பிப்ரவரி 27ஆம் தேதி பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழும் குடும்பத்தின் தலைவர் பெண்ணாக இருந்தால் மாதம் 3 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும் என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், தனியாக பிள்ளைகளை வளர்க்க சிரமப்படும் பெண்களுக்கு புதிய வாய்ப்பை ஏற்படுத்தும் என்றும், இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.36,000 கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியாக இருக்கும் பெண்கள் பெரும்பாலும் படிக்காதவர்களாகவும், ஏழ்மை நிலையிலும் இருப்பதால் அவர்களுக்கு நல்ல வேலை கிடைப்பதிலும் சிக்கல் உள்ளது.

மேகாலயத்தில் குழந்தை திருமணம் மற்றும் சிறு வயதில் குழந்தைப்பேறு ஆகியவையும் அதிகமாக உள்ளது. 

மேலும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை உறுதி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேகாலயத்தில் வேலை வாய்ப்பு உருவாக்கப்படாததால், மாநில இளைஞர்கள் தில்லி, மும்பை, கொல்கத்தா போன்ற நகரங்களுக்கு இடம்பெயரும் நிலை ஏற்படுகிறது. எனவே, மேகாலயத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் ஒருவருக்கு வேலை வழங்குவதே எங்களது இலக்கு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேகாலயா மாநிலத்தில் உள்ள வீடு மற்றும் கடைகளுக்கு தடையற்ற மின்சாரம் உறுதி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

'மோடி உத்தரவாதம்' ஒரு தடயமும் இல்லாமல் மறைந்துவிட்டது: ப.சிதம்பரம் தாக்கு

சாதனை நாயகன் குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு!

SCROLL FOR NEXT